📰🌅காலை செய்திகள்🌤📰
🗓️January 18,2021🗓️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 87.63(⬆️0.23)
🚚DIESEL - 80.19(⬆️0.24)
✴️பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் என ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
✴️தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு.
✴️நாடு முழுவதும் 2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.
✴️பதிவு செய்த உடனே சமையல் கியாஸ் சிலிண்டரை தட்கல் முறையில் விநியோகம் செய்யும் முறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
✴️அரசு மீது ஊழல் புகார் கூறும் ஸ்டாலின்,
அதுகுறித்து என்னுடன் விவாதிக்க துண்டு
சீட்டு இல்லாமல் வரத் தயாரா; முதல்வர் பழனிசாமி சவால்.
✴️வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 234
தொகுதிகளிலும் வெற்றி பெறும்; அதிமுக
எதிர்கட்சியாகக் கூட வரமுடியாது என
மு.க.ஸ்டாலின் கருத்து.
✴️கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு; 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்.
✴️கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்க
வேண்டும் என்பதே அரசின் இலக்கு;
தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் தகவல்.
✴️சில நாட்கள் மருத்துவ ஓய்வில்
இருக்கப்போவதாக மநீம தலைவர்
கமல்ஹாசன் அறிவிப்பு: காலில் அறுவை
சிகிச்சை செய்துகொள்ளப்போவதாக தகவல்.
✴️முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி
பயணம்; மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு.
✴️ கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்.
🌍உலகச்செய்திகள்
✴️அமெரிக்க நிர்வாகத்தில் 20 இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி ஜோபைடன் கௌரவித்துள்ளார்.
✴️மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதாக அபுதாபி நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
✴️இந்தோனேசியாவில் செமெரு எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை உமிழ்ந்து வருகிறது. 6 கிலோமீட்டருக்கு சாம்பல் மணடலம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தப்பி ஓடி வருகின்றனர்.
✴️அவசர கால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசிக்கு பிரேசில் கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் சினோவாக் பயோடெக் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ராஜெனிகா தடுப்பூசிக்கும் பிரேசில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
✴️கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது மீண்டும்கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது. இதில் 24 மணி நேரத்தில் மேலும் 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சீனாவில் தற்போது 1,205 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 42 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
⚽விளையாட்டுச் செய்திகள்
✴️4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 4ஆம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 149/4. இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெறும் டெஸ்ட்டில் ஆஸி. அணி 182 ரன்கள் முன்னிலை.
No comments:
Post a Comment