📰🌅காலை செய்திகள்🌤📰
🗓️January 07,2021🗓️
🔒Lockdown : Day 2️⃣8️⃣9️⃣
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 86.96(⬆️0.21)
🚚DIESEL - 79.72(⬆️0.26)
◼️அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
◼️தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்றும் நடைபெறவுள்ளது.
◼️தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான
முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாஹு மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
◼️வாஷிங்டனில் நிகழ்ந்த வன்முறை செய்தியை கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன்; நேர்மையாகவும், அமைதியாகவும் அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும்; சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்த்தெறிய முடியாது - பிரதமர் மோடி ட்வீட்
◼️பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
◼️திரையரங்குகளில் 100 சதவீத
இருக்கைகளுக்கான, அனுமதி உத்தரவு
திரும்பப் பெறப்படுமா?; தமிழக அரசின்
முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு.
◼️கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவை
காய்ச்சல் எதிரொலி; எல்லைகளிலுள்ள
சோதனை சாவடிகளில் கிருமி நாசினி
தெளிக்கும் பணி தீவிரம்.
◼️தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.
🌍உலகச்செய்திகள்
◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,888,975 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 87,581,395 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 63,090,052 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 108,796 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
◼️அமெரிக்கா : வாசிங்டனில் உள்ள அரசு மாளிகையில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் சூறை. தேர்தல் முடிவுகள் வெளியீட்டின் போது கலவரம். துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலி.
◼️நாடாளுமன்றத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்தது ஜனநாயகத்தின் கருப்பு தினம் - ஜோ பைடன்.
◼️அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு 24 மணி நேரத்திற்கு முடக்கம்.
◼️அமெரிக்காவில் நடந்தது மோசடியான தேர்தல் என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் மழை காரணமாக பாதிப்பு.
No comments:
Post a Comment