📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️October 12,2020🗓️
🔒Lockdown : Day 2️⃣0️⃣2️⃣
🌡️வெப்பநிலை🌪️
🌞33°C⬆️ ❄25°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️பெலுடா என்ற புதிய கொரோனா
பரிசோதனை விரைவில் அறிமுகம்; மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
தகவல்.
◼️இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளன - மத்திய சுகாதார அமைச்சகம்.
◼️நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாநில அரசுகள் வலியுறுத்த திட்டம்
◼️வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள
நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை.
◼️எல்லைப்பகுதி சாலை இணைப்புக்குரிய அமைப்பான BRO கட்டியிருக்கும் 44 புதிய பாலங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
◼️குளிர் காலத்தில் கொரோனா அதிகரிக்கும் ஆபத்து; பண்டிகைகளை வீடுகளுக்குள்ளேயே கொண்டாட அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள்.
◼️காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக
வடக்கு ஆந்திராவின் பல்வேறு
மாவட்டங்களில் கன மழை பெய்யும் என
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
◼️வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம்; நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
◼️பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு; ஜே.பி.நட்டா
முன்னிலையில் இணைய உள்ளதாக தகவல்.
◼️சென்னை தியாகராய நகரில் அக்.1ல் வயதான தம்பதியரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்கப்பட்ட 250 சவரன் நகை தங்க கட்டியாக மும்பையில் மீட்டது சென்னை போலீஸ்
◼️தென்காசி மாவட்டம், ஆயாள்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் காஷ்மீரில் மரணம் - இன்று காலையில் குடும்பத்தினருக்கு தகவல்.
◼️டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 5ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு - ரிசர்வ் வங்கி.
◼️ மறைந்த பாஜக மூத்த தலைவர் விஜயராஜே சிந்தியா நினைவாக பிரதமர் மோடி 100ரூபாய் நாணயம் வெளியீடு.
🌍உலகச்செய்திகள்
◼️உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,736,120 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 28,342,318 பேர் குணமடைந்த நிலையில், 1,081,246 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 8,312,556 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், 68,859 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
◼️செல்போன் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் நான்கு வாரங்கள் வரை அதில் மறையாதிருக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
◼️ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
◼️சீனாவின் Jiangsu மாகாணத்தில், முதல் முறையாக, பேட்டரி மூலம் இயங்கும் மின்சார சரக்கு ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மூலம் இயக்கப்படும் சரக்கு ரயில்களால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதால், lithium iron பேட்டரி மூலம் இயக்கப்படும் 50 அடி நீள ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
◼️ வங்கதேச பிரீமியர் லீக் இந்த ஆண்டு இல்லை: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
◼️ ஐபிஎல் 2020: இன்றைய ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன.
◼️பாரீசில் நடைபெற்ற பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டியில், நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை 6-0, 6-2, 7-5 என்ற கணக்கில் வீழ்த்திய நடால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றுள்ள ரோஜர் பெடரரின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார்.
No comments:
Post a Comment