📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️October 11,2020🗓️
🔒Lockdown : Day 2️⃣0️⃣1️⃣
🌡️வெப்பநிலை🌪️
🌞32°C⬆️ ❄25°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️ஹத்ராசில், பட்டியலின பெண் பாலியல்
வன்கொடுமை செய்து படுகொலை
செய்யப்பட்ட சம்பவம்; வழக்கை
விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது சிபிஐ.
◼️இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை நிறுத்தியுள்ள சீனா; அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தகவல்.
◼️35 நாட்களில், அடுத்தடுத்து 9 ஏவுகணைகள் பரிசோதனை; சீனாவுக்கு
பதிலடி கொடுக்கத் தயாராகும் இந்தியா.
◼️வங்கி கடன்களுக்காக அறிவிக்கப்பட்ட மாத தவணை சலுகையை மேலும் நீட்டிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ்வங்கி திட்டவட்டம்.
◼️எடப்பாடி பழனிசாமியை முதல்வர்
வேட்பாளராக ஏற்பவர்களுடன் கூட்டணி; அதிமுகவின் கே.பி.முனுசாமி திட்டவட்டம்.
◼️பட்டியலின் ஊராட்சி மன்ற தலைவியை
தரையில் அமர வைத்த விவகாரம்; ஊராட்சி
மன்ற செயலாளர் சிந்துஜா கைது; துணை
தலைவருக்கு போலீஸ் வலை.
◼️இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் கடந்த 35 நாட்களில் இந்தியா பத்து ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளது தற்செயலானதல்ல என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
◼️விலைவாசியைக் கட்டுப்படுத்த உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு போன்றவற்றை குறைந்த விலையில் மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
◼️காஷ்மீரில் தாக்குதல் நடத்த பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தளபதி உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
◼️பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.
🌍உலகச்செய்திகள்
◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,77,458 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 37,459,161 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 28,111,951 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 68,611 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
◼️முதலாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
◼️கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் பூரண குணமடையாத நிலையிலும் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
◼️'கோவிட்-19 நோயை விளைவிக்கும் சார்ஸ்-கோவ்-2 (SARS-CoV-2) என்ற கரோனா வைரஸ், இயற்கையாக உருவானதே அன்றி மனிதர்களால் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்டதல்ல'' என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் சூசன் வைஸ் கூறியுள்ளார்.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி.
◼️ ஐபிஎல் 2020: இன்றைய ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
◼️பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரபேல் நடால், உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இன்று மோத உள்ளனர்.
No comments:
Post a Comment