📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️October 09,2020🗓️
🔒Lockdown : Day 1️⃣9️⃣9️⃣
🌡️வெப்பநிலை🌪️
🌞34°C⬆️ ❄24°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம், இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில், ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக் கழகங்களை இந்தியாவில் தொடங்க அனுமதி அளிப்பது, கொரோனா தடுப்புப் பணிகள், லடாக் எல்லை விவகாரம் போன்ற, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
◼️வருகிற 13 ஆம் தேதி முதல் இரு நாட்கள் 3 மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம். கொரோனா
தடுப்பு பணி, வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.
◼️வேளாண் சட்டங்களால் விளை பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்.
◼️கைவிரல் ரேகை அங்கீகாரம் இல்லாவிட்டால் மாற்று முறையைக்
கையாண்டு பொருட்களை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு.
◼️தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் பிணையில்லாக் கடன். பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை.
◼️அதிகளவில் மாசுபடுத்தும் ஆலையாக இருப்பதால் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கக் கூடாது. உச்சநீதிமன்றத்தில்
தமிழக அரசு பதில் மனுத் தாக்கல்
◼️இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ.பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திததுப் பேச்சுவார்த்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். எல்லையில் சீனாவின் அத்துமீறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
◼️மத்திய தொல்லியல் துறையில் முதுநிலைப் பட்டயபடிப்பு சேர செம்மொழியான தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல் துறை இணை இயக்குனர் உத்தரவு.
◼️நாட்டில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
◼️ஹிமாச்சல் பிரதேசத்தில் அதிகாலை 2.43 மணிக்கு லேசான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
◼️மணிப்பூரில் லேசான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.
🌍உலகச்செய்திகள்
◼️ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் கருப்பையில் சராசரியாக இறந்து வரும் நிலையில் கொரோனா காரணமாக மேலும் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
◼️ரஷ்ய அதிபர் புடின் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இரு நாடுகளிடையே போர்நிறுத்தத்தை எட்ட மத்தியஸ்தம் செய்ய உள்ளார்.
◼️உலக வா்த்தக அமைப்பின் புதிய தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தோந்தெடுக்கப்படவுள்ளாா். உலக வா்த்தக அமைப்பின் அடுத்த தலைவரைத் தோந்தெடுப்பதற்கான இறுதிச் சுற்றுக்கு இரு பெண்கள் தோந்தெடுக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இருவரில் ஒருவா் உலக வா்த்தக அமைப்பின் தலைவராகத் தோந்தெடுக்கப்படவுள்ள நிலையில், அந்த அமைப்புக்கு முதல் முறையாக ஒரு பெண் தலைவராகப் பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
◼️சுற்றுச்சூழல் எதிா்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கு புதுமையான தீா்வுகளை அளிப்பவா்களுக்காக 'எா்த்ஷாட் பரிசு' என்ற புதிய பரிசை பிரிட்டன் இளவரசா் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ளாா்.
◼️இத்தாலி முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
◼️ ஐபிஎல் 2020: இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி- டெல்லி கேப்பிடல் அணிகள் மோதுகின்றன.
No comments:
Post a Comment