📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️October 08,2020🗓️
🔒Lockdown : Day 1️⃣9️⃣8️⃣
🌡️வெப்பநிலை🌪️
🌞36°C⬆️ ❄24°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு; கட்சியின்
ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
◼️அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில்
முதல்முறையாக அணிவகுத்த ராணுவ
வாகனங்கள்; லே பகுதி வீரர்களுக்கு
தேவையான பொருட்களுடன் பயணம்.
◼️தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன்
கூடிய கனமழைக்கு வாய்ப்பு; சென்னை
வானிலை ஆய்வு மையம் தகவல்.
◼️சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது
கொரோனா தொற்று; தமிழகம் முழுவதும்
ஒரே நாளில் 5 ஆயிரத்து 547 பேருக்கு
பாதிப்பு.
◼️2020ம் ஆண்டு வேதியியல் துறைக்கன
நோபல் பரிசு அறிவிப்பு; 2 பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு.
◼️கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான
ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி
ரன் குவிக்க முடியமால் திணறிய கேதர்
ஜாதவினால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி.
◼️கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : ஒரே நாளில் 10 ஆயிரத்து 606 பேருக்கு பாதிப்பு.
◼️டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆப்கானிஸ்தானின் நல்லெண்ண தூதுவர் அப்துல்லா அப்துல்லா உடன் ஆலோசனை நடத்தினார்.
◼️தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
◼️பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், அரசு உதவியில் இயங்கும் பள்ளிகளுக்கும் இலவசமாக சீருடைகள் வழங்க ஜெகன்மோகன் அரசு 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
🌍உலகச்செய்திகள்
◼️உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,63,76,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 27,393,733 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,059,915 பேராக அதிகரிப்பு என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
◼️அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், அமெரிக்கர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக எச்1பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
◼️மெக்ஸிகோ கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த டெல்டா புயல் நேற்று அந்நாட்டின் கான்கன் பகுதியில் கரையைக் கடந்தது.
◼️அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்த துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், இரண்டு வருட பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு இலவசமாக அளிக்கப்படும் என்று அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
◼️அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவுக்கான கெடுபிடிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு நேற்று முன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திறன்மிகு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி விசாவில் பணி புரியும் ஊழியர்களுக்கான சம்பள விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் 4வது சுற்று முடிவுகள்: ஜோகோவிச், சிட்ஸிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
◼️கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
No comments:
Post a Comment