காலை செய்திகள் 16/07/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 16, 2020

காலை செய்திகள் 16/07/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
                 🗓️July 16,2020🗓️
           🔒Lockdown : Day 1️⃣1️⃣4️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞35°C⬆️      ❄26°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 83.63(↔️)
    🚚DIESEL -  78.22(↔️)

◼️தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் பொறியியல் (இன்ஜினியரிங்) கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார். ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16ம் தேதி வரை பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் செப்டம்பர் 10 மற்றும் 17ம் தேதிகளில் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

◼️சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

◼️தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் 14 தொலைக்காட்சிகள் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை இரண்டரை மணி நேரம் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

◼️மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் பாரசிட்டமால் மாத்திரை வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

◼️கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க, இப்போதுள்ள ஒரே மந்திரம், 'திறன். மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு' மட்டும்தான், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

◼️வீடுகளில் பயன்படுத்தப்பட்ட 4 மாதங்களுக்கான மின்சார அளவை மொத்தமாகக் கணக்கிட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

◼️ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா பகுதியில் அதிகாலையில் மிக லேசான நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 2.3ஆக பதிவு.

◼️கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,905 ஆக அதிகரிப்பு.

◼️கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் மீது அவதூறு பரப்பியதாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்நாதனை சென்னை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை.

◼️சென்னையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

◼️சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி தமிழக பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


🌍உலகச்செய்திகள்

◼️உலகளவில் கொரோனா தொற்று:
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.36 கோடியாக அதிகரிப்பு. தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 80.28 லட்சமாக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.86 லட்சமாக அதிகரிப்பு

◼️அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,15,991 ஆக அதிகரிப்பு. கொரோனா தொற்றால் மேலும் 958 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,40,101 ஆக உயர்வு.

◼️பிரேசிலில் ஒரே நாளில் 39,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 19,70,909 ஆக அதிகரிப்பு. கொரோனா தொற்றால் 1,261 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 75,523 ஆக உயர்வு.

◼️அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து, இறுதிக் கட்ட பரிசோதனை நிலையை அடைந்துள்ளதாக அந்த நாட்டு கரோனா தடுப்பு நிபுணா் குழுத் தலைவா் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளாா். 

◼️ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் குறித்து அதிகபட்ச ரெட் அலர்ட் ( highest “red” level) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

◼️இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ருடெங் நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 600 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.


விளையாட்டுச் செய்திகள்

◼️இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2வது டெஸ்ட், மான்செஸ்டர் ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. 

◼️10-வது பிக் பாஷ் டி20 லீக் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கும் டிசம்பர் 3-ந்தேதி பிக் பாஷ் தொடர் தொடங்குகிறது. சுமார் 60 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டி 2021 பிப்ரவரி 6-ந்தேதி முடிவடைகிறது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages