காலை செய்திகள் 26/06/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 26, 2020

காலை செய்திகள் 26/06/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
                 🗓️June 26,2020🗓️
           🔒Lockdown : Day,9️⃣4️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞35°C⬆️      ❄25°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 83.37(0.19⬆️)
    🚚DIESEL -  77.44(0.15⬆️)

◼️தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மருத்து கடைகள் மூடல் - மருந்து வணிகர்கள் சங்கம்.

◼️சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து இன்று ஒரு நாள் முழுவதும் தமிழகத்தில் கடையடைப்பு.

◼️தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கரோனா வைரஸ் எதிர்ப்பு ஊசி மருந்தான ரெம்டெசிவிர் அனுப்பப்பட்டுள்ளது.

◼️ஆன்லைன் வகுப்பின்போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால், அது தொடர்பாக மனுதாரர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.

◼️மகாராஷ்டிராவில் சலூன் கடைகள் ஜூன் 28ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு.

◼️ திருச்சி முக்கொம்பில் கட்டப்படும் புதிய கதவணை பணியை முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்யவுள்ளார்.

◼️தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,463 கணினி ஆசிரியா்களுக்கு வரும் 2022 ஆம் ஆண்டு வரை மூன்றாண்டு பணி நீட்டிப்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

◼️விண்வெளித் துறையில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பிற்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசின் நடவடிக்கையை, 'இஸ்ரோ' தலைவர் சிவன் வரவேற்றுள்ளார்.

◼️சாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் இறந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய வழக்குகளை தவிர்த்து, விசாரணை கைதிகளிடம் கடினமாக நடந்து கொள்ள வேண்டாம். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டாம் என்று போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.

◼️மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பள்ளியில் உள்ள அமைச்சு பணியாளா்கள் மூலமாகவே பள்ளிகளுக்கு பாடநூல்கள் முறையாக விநியோகிக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

◼️வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரு நாட்கள் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. பீகார் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


🌍உலகச்செய்திகள்

◼️உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,710,205 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 491,783 பேர் உயிரிழந்த நிலையில் 5,255,758 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,619 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

◼️ரஷ்யாவில் விளாடிமிர் புடினை வாழ்நாள் முழுவதும் அதிபராக நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சீர்த்திருத்த சட்டத்தை கொண்டு வருவதற்கு, பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடங்கியது.

◼️இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னையால் பதற்றம் அதிகரிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

◼️ஐ.நா. பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.

◼️அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு ஏவுகணைகள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


விளையாட்டுச் செய்திகள்

◼️ஸ்பெயினில் நடைபெற்று வரும் கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி தொடரில் மாட்ரிட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி மல்லோர்கா கிளப் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages