📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️June 24,2020🗓️
🔒Lockdown : Day,9️⃣2️⃣
🌡️வெப்பநிலை🌪️
🌞36°C⬆️ ❄25°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 83.04(↔️)
🚚DIESEL - 76.77(↔️)
◼️பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை.
◼️தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று அவசர ஆலோசனை.
◼️மதுரை மாவட்டத்தில் இன்று முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் முழு முடக்கம்.
◼️தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு - தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு.
◼️கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், முழுஊரடங்கை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலனை என தகவல் வெளியாகியுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
◼️கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை வசூலிக்க கூடாது என்ற அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
◼️தனியார் பள்ளிகள் 10ம் வகுப்பு தேர்வை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
◼️ஆன்லைன் வகுப்புகள் நடத்த கட்டாயமில்லை என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
◼️பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து இந்தியாவிலேயே 50 ஆயிரம் வென்டிலேட்டர் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக, ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
◼️கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் நதி பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சீனா உத்தரவிட்டது என்று அமெரிக்க உளவுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
◼️''இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசின், தவறான நிர்வாகமே காரணம்,'' என, காங்., தலைவர், சோனியா கூறியுள்ளார்.
◼️குடிமராமத்து பணி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26ம் தேதி திருச்சி செல்லும் நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
◼️மிசோரம் மாநிலம் சாம்பாய் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது.
🌍உலகச்செய்திகள்
◼️உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93,45,569ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,36,723ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,78,949ஆக உயர்வு.
◼️அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 24,24,168ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,23,473ஆக உயர்வு.
◼️ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் சோதனை தடுப்பூசியை இரண்டு தடவைகளாக பன்றிகளிடம் பரிசோதித்த போது அவற்றிடம் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பெரிய அளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
◼️கொரோனா வைரஸ் உலகளவில் வேகமாக பரவி வருவதாகவும், அதன் தாக்கம் இன்னும் பல பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பில் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
◼️இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு ரஷ்யா தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
◼️எச்1பி விசா ரத்து டிசம்பர் வரை நீட்டிப்பு 3 லட்சம் இந்தியர்கள் கனவு பொசுங்கியது: டிரம்ப் அதிரடி உத்தரவு.
◼️மெக்சிகோவின் ஓக்சாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. வீரர்கள் புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரீஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்தது.
◼️கொரோனா எதிரொலியாக அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் புதிய அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடக்கிறது. இறுதிப்போட்டி நவிமும்பையிலும், இந்திய அணிக்குரிய லீக் ஆட்டங்கள் கவுகாத்தியிலும் நடைபெறுகிறது.
◼️உலகின் நம்பா் ஒன் டென்னிஸ் வீரரும், சொபியாவைச் சோந்தவருமான நோவக் ஜோகோவிச் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்.
No comments:
Post a Comment