காலை செய்திகள் 21/01/2021 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 21, 2021

காலை செய்திகள் 21/01/2021

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️January 21,2021🗓️
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 87.85(⬆️0.22)
  🚚DIESEL -  80.67(⬆️0.24)

✳️அமெரிக்காவின் 46வது அதிபராக
பதவியேற்றார் ஜோ பைடன்; வாஷிங்டனில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பதவியேற்பு.

✳️10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

✳️அமெரிக்காவின் முதல் பெண் துணை
அதிபரானார் கமலா ஹாரிஸ்; பூர்வீக
கிராமத்தில் பட்டாசுகள் வெடித்து
பொதுமக்கள் கொண்டாட்டம்.

✳️நீட் தேர்வு தொடர்பாக உண்மைக்கு
புறம்பான தகவல்களைக் கூறுவதா; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.

✳️மக்களை சந்தித்து அதிமுக ஆட்சியை
அகற்றுவோம்; மக்கள் கிராம சபை
கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை.

✳️மதச்சார்பின்மை என்கிற ஒற்றை
நேர்கோட்டில் இணைய திமுக கூட்டணிக்கு வாருங்கள்; மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு, கே.எஸ். அழகிரி அழைப்பு.

✳️பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது - திருமாவளவன் திட்டவட்டம்.

✳️மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டடுள்ளார் சசிகலா என தகவல்.

✳️மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம் வரும் 28-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு. முன்னதாக தமிழக அரசு அரசுடமையாக்கி அறிவித்திருந்தது.

✳️ரஜினிக்காக கட்சி தொடங்கியவரும், ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகவும் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச்செயலாளர் பொறுப்பு.


🌍 உலகச்செய்திகள்

✳️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,081,056 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 97,259,893 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 69,818,142 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 112,321 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

✳️அமெரிக்காவின் வயதான அதிபர் என்ற பெருமையுடன் 78 வயதான ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார்.

✳️அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அமெரிக்க நாட்டை முன்னேற்றுவோம் என்றும் நாமும் முன்னேறுவோம் என்றும் அதிபராக பதவியேற்ற ஜோபைடன் அவர்களின் முதல் பேச்சு.

✳️மெக்ஸிகோ: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,584 போ அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கொரோனா பலியாகும்.

✳️ஜிம்பாப்வே வெளியுறவுத் துறை அமைச்சா் சிபுசிஸோ மோயோ கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா்.


விளையாட்டுச் செய்திகள்

✳️தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்திருக்கிறது. கடந்த ஐ.பி.எல்-ல் மோசமாக ஆடி கடும் விமர்சனத்திற்குள்ளான கேதர் ஜாதவ், முரளிவிஜய், பியுஷ் சாவ்லா மற்றும் ஹர்பஜன்சிங், மோனுகுமார் சிங், ஷேன் வாட்சன் (இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்) ஆகிய 6 பேரை சென்னை அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages