காலை செய்திகள் 19/01/2021 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 19, 2021

காலை செய்திகள் 19/01/2021

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️January 19,2021🗓️
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 87.85(⬆️0.22)
  🚚DIESEL -  80.67(⬆️0.24)

✴️10 மாத கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர்  தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

✴️சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

✴️மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு.

✴️கொரோனா தடுப்பூசி போட்டு உயிரிழந்த இருவரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை: தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் தகவல்.

✴️தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் 75 நிமிடம் ஆலோசனை அமித்ஷா-எடப்பாடி பேச்சில் இழுபறி: அதிக தொகுதி கேட்டு பாஜக பிடிவாதம்; முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக பாஜக மீது பரபரப்பு புகார்.

✴️அலர்ஜி, காய்ச்சல், இரத்தக்கசிவு போன்ற பாதிப்புடையவர்கள் தடுப்பூசி போடவேண்டாம் - பாரத் பயோடெக் நிறுவனம்.

✴️விஜய் மல்லயாவை விரைவில் இந்தியா அழைத்து வர நடவடிக்கை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் உறுதி.

✴️2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 158 முதல் 166 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும், அதிமுக கூட்டணிக்கு 60 முதல் 68 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி - சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.  

✴️வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


🌍உலகச்செய்திகள்

✴️பிரிட்டனில் புதிதாக 37,335பேருக்கு கொரோனா  தொற்று, 599பேர் உயிரிழப்பு.

✴️அமெரிக்காவில் புதிதாக 1.41 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று. ஒரே நாளில் 1417பேர் உயிரிழப்பு.

✴️தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் சாம்சங் சியான் லீக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

✴️சீனப் பொருளாதாரம் கடந்த 2020-ஆம் ஆண்டில் 2.3 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் சீனப் பொருளாதாரம் மிக குறைந்த அளவிலான வளா்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

✴️பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் உட்பட 3 மருந்துகளுக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.


விளையாட்டுச் செய்திகள்

✴️இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 235 ரன்களில் உள்ளன என்பதும் கையில் 9 விக்கெட்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages