காலை செய்திகள் 17/01/2021 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 17, 2021

காலை செய்திகள் 17/01/2021

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️January 17,2021🗓️
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 87.40(↔️)
  🚚DIESEL -  80.19(↔️)

🔷இந்தியா முழுவதும் முதல் நாளன்று 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை.

🔷நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், 2-வது நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.

🔷தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்.

🔷கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் ஹர்ஷவர்தன்.

🔷குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலை பகுதிக்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில் சேவை இன்று தொடக்கம்.

🔷கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 99 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தகவல்; கோவின் செயலியில் குளறுபடியால்
மராட்டியத்தில் தடுப்பூசி செலுத்துவது நிறுத்தி வைப்பு.

🔷தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்பெற திடீர் நிபந்தனை;
தகவல்களை கேட்பவர்கள், அதற்கான காரணத்தைக் கூற உத்தரவு.

🔷காவிரி டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்குமாறு
விவசாயிகள் கோரிக்கை; பருவம் தவறி பெய்த மழையால் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழிந்துவிட்டதாக வேதனை.

🔷தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தடை;
மாநில அரசுகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு.

🔷பிரதமர் மோடியை நாளை மறுநாள் சந்திக்கிறார் முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி; சசிகலா விடுதலையாக உள்ள நிலையில்
நடக்கும் சந்திப்பால் அ.தி.மு.க.வில் பரபரப்பு.

🔷தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


🌍உலகச்செய்திகள்

🔷உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,37,696 பேர் அதிகரித்து மொத்தம் 9,49,22,964 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,893 பேர் அதிகரித்து மொத்தம் 20,29,648 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 6,77,58,836 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,51,34,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

🔷ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

🔷அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 194581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 3,351 பேர் பலியாகி உள்ளனர்.

🔷அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் வரும் 20 ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் வன்முறை நிகழலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

🔷தொற்றை தடுப்பதற்காக ஜப்பான் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


விளையாட்டுச் செய்திகள்

🔷ஆஸ்திரேலியாவுக்கு எதிரான
4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களுடன் விளையாடி வருகிறது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages