காலை செய்திகள் 12/01/2021 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 12, 2021

காலை செய்திகள் 12/01/2021

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️January 12,2021🗓️
    🔒Lockdown : Day 2️⃣9️⃣4️⃣  
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 86.96(↔️)
  🚚DIESEL -  79.72(↔️)

◼️புனே சீரம் இந்தியா நிறுவனத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை கொரோனா தடுப்பூசிகள் சென்னை வருவதாக தகவல்.

◼️மூன்று கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்; மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் பிரதமர்
மோடி அறிவிப்பு.

◼️நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி
செலுத்துவதற்கான பணிகள் தீவிரம்;
கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 1 கோடி
டோஸ்களை கொள்முதல் செய்ய ஒப்புதல்.

◼️அமைச்சர்களோடு தேர்தல் குறித்து
பேசவில்லை வன்னியர்களுக்கான
இட ஒதுக்கீடு குறித்துதான் பேசினேன்;
பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம்.

◼️பட்ஜெட்டில் 'செஸ்' எனப்படும் துணை வரிகள் விதிக்கப்படலாம் : கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட மத்திய அரசு திட்டம்.

◼️கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து, வெளி மாநிலங்களில் இருந்து கோழி, வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை விதித்துள்ளது.

◼️தெலுங்கானாவில் பிப்ரவரி 1-ம் தேதி அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

◼️விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையதளத்தில் லீக் செய்தது சோனி டிஜிட்டல் சினிமாஸ் நிறுவன ஊழியர் என கண்டுபிடிப்பு.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,951,884 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 91,274,892 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 65,212,294 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 108,821 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

◼️மலேசியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்து மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா உத்தரவு. கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை.. இந்தாண்டு ஆகஸ்ட் 1வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு.

◼️அமெரிக்க மக்களுக்கு கரோனா நிவாரண நிதி தலா 2,000 டாலர்: ஜோ பைடன் வலியுறுத்தல்.

◼️உலகம் முழுவதும் 15 லட்சம் பேருக்கு ஸ்புட்னிக் மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தகவல்.

◼️அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு 2வது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

◼️ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages