காலை செய்திகள் 11/01/2021 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 11, 2021

காலை செய்திகள் 11/01/2021

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️January 11,2021🗓️
    🔒Lockdown : Day 2️⃣9️⃣3️⃣  
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 86.96(↔️)
  🚚DIESEL -  79.72(↔️)

◼️கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர், அனைத்து மாநில  முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை.

◼️பொங்கல் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம் இன்று முதல் தொடக்கம். தினசரி இயக்கப்படும் 2,050 பேருந்துகள் தவிர்த்து, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 176 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2, 226 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது.

◼️ டெல்லியில் 47வது நாளாக நீடிக்கும்
விவசாயிகள் போராட்டம்; ஹரியானாவில்
முதலமைச்சர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி
மேடையை சூறையாடிய விவசாயிகள்.

◼️நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலனை; முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி தகவல்.

◼️புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்
பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக
ஒத்திவைப்பு: முதலமைச்சர் நாராயணசாமி
அறிவிப்பு.

◼️சட்டப் பேரவைத் தேர்தலை சுமுகமாக நடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

◼️திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பதவி காலத்தை நீட்டித்துள்ளதை போல, வரும் ஏப்ரலோடு முடிவடைய இருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் பதவி காலத்தையும் நீட்டிக்க ஆளுநர் முடிவு என தகவல்.

◼️ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக எல்லைக்குள் நுழைந்து நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான தமிழ் பெயர்ப் பலகையை, கன்னட சலுவாலியா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் அடித்து உடைத்து சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

◼️தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.


🌍உலகச்செய்திகள்

◼️அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருவதையடுத்து, புதிய அதிபராகப் பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

◼️கடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசிய விமானத்தின் எஞ்சின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட உதிரி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

◼️இந்தோனேஷியாவில் கனமழையால் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்.

◼️அடுத்த வாரம் தாம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

◼️அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொடர்ச்சியாக மர்ம மனிதர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர்.

◼️தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2-ஆவது கரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில், புதுவகை கரோனாவால் 3-ஆவது கரோனா அலை எழுவதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.


விளையாட்டுச் செய்திகள்

◼️ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 407 ரன் இலக்கை நோக்கி ஆடிவரும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்தியா வெற்றி 48 ஓவர்களில் 147 ரன்கள் தேவை.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages