📰🌅காலை செய்திகள்🌤📰
🗓️January 08,2021🗓️
🔒Lockdown : Day 2️⃣9️⃣0️⃣
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 86.96(↔️)
🚚DIESEL - 79.72(↔️)
◼️தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை இன்று நடைபெறுகிறது.
◼️மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையிலான திட்டங்கள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்.
◼️ஆன்லைன் ஆப் மூலம் கடன் வழங்கி சட்ட விரோதமாக சீனாவுக்கு 300 கோடி பணம் பரிமாற்றம்: அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது.
◼️பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை காப்பாற்ற ஆட்சியாளர்கள் முயற்சி; திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு.
◼️பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க அரசு முயற்சிக்கவில்லை; தவறிழைத்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி.
◼️பாஜக இல்லையெனில் தமிழகத்தில் அரசியலே இல்லை; தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வரை சட்டமன்றத்தில் அமர வைப்போம் என பாஜக மாநில தலைவர் சூளூரை.
◼️தமிழகம் வந்த மத்திய சுகாதாரத்துறை
அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு சிறப்பான
வரவேற்பு; கொரோனா தடுப்பூசி ஒத்திகை
மையங்களில் இன்று நேரில் ஆய்வு.
🌍உலகச்செய்திகள்
◼️கொரோனா தொற்று பரவலை தடுக்க ஜப்பானின் டோக்கியோ, சைட்டாமா, சிபா மற்றும் கனகாவா ஆகிய நகரங்களில் பிப்ரவரி 7 வரை அவசர நிலை பிரகடனம்.
பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவு.
◼️ஐ.நா. தூதர் தைவானுக்குச் சென்றால் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரித்துள்ளது. தைவானுடன் உறவை மேம்படுத்த இந்த சந்திப்பு உதவும் என அமெரிக்கா கூறியிருந்தது.
◼️தோல்வியை ஒப்புக்கொண்ட டிரம்ப் : கேபிடல் மீது கொடூரமான தாக்குதல் என்னை கோபப்படுத்தியது. புதிய நிர்வாகம் ஜனவரி 20 ஆம் தேதி பதியேற்கும். - அதிபர் டொனால்ட் டிரம்ப்.
◼️அமெரிக்க நாட்டில் முதன்முறையாக ஒரே நாளில் 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
◼️டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்- ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா நம்பிக்கை.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சற்றுமுன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 256 ரன் எடுத்துள்ளது.
No comments:
Post a Comment