காலை செய்திகள் 06/01/2021 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 6, 2021

காலை செய்திகள் 06/01/2021

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️January 06,2021🗓️
    🔒Lockdown : Day 2️⃣8️⃣8️⃣  
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 86.75(↔️)
  🚚DIESEL -  79.46(↔️)

◼️ஜனவரி 29ம் தேதி முதல் நாடாளுமன்ற
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்;
பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்
செய்யப்படும் எனவும் அறிவிப்பு.

◼️டெல்லியில் 42-வது நாளாக தொடரும்
விவசாயிகள் போராட்டம்; ஆணவத்தை
விடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தல்!

◼️இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல்,
கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பு: சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில், தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைப்பு.

◼️பறவைக்காய்ச்சல் நோயினை மாநில பேரிடராக பிரகடனப்படுத்தியது கேரள அரசு; உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

◼️எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தக்கூடாது
என கூற, அதிமுக என்ன தேர்தல்
ஆணையமா?; மக்கள் நீதி மய்யம் தலைவர்
கமல்ஹாசன் கேள்வி.

◼️பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம்
இன்று முதல் கருத்து கேட்பு கூட்டம்;
பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்திடவும் அறிவுறுத்தல்.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18.74 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,874,318 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 86,806,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 61,521,028 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 107,699 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

◼️கொரோனாவை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று ஆப்பிரிக்க விஞ்ஞானி ஜாக்குவஸ் எச்சரித்துள்ளார்.

◼️அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் WeChat, CamScanner, SHAREit உள்ளிட்ட 8 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

◼️இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு தினத்தன்று 33 ஆயிரத்து 615 குழந்தைகளும், இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

◼️ஜெர்மனியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்க அந்நாட்டின் மத்திய, மாகாண அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages