காலை செய்திகள் 04/01/2021 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 4, 2021

காலை செய்திகள் 04/01/2021

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️January 04,2021🗓️
    🔒Lockdown : Day 2️⃣8️⃣6️⃣  
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 86.51(↔️)
  🚚DIESEL -  79.21(↔️)

◼️வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்; மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.

◼️பள்ளிகளை திறப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று தொடங்கி, இந்த வார இறுதி வரை நடைபெறும் -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன்.

◼️திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள்
சரியான பாடம் புகட்ட வேண்டும்;
விவசாயிகளை இழிவாக பேசியதாக
முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு.

◼️தமிழக அமைச்சர்களின் 2வது ஊழல்
பட்டியல் தயாராகி வருகிறது; விரைவில்
ஆளுநரிடம் வழங்கப்படும் என திமுக
தலைவர் ஸ்டாலின் பேச்சு.

◼️திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால்,
முதலமைச்சராக முடியாது; விரைவில் நல்ல
முடிவை அறிவிப்பேன் என ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி தகவல்.

◼️ரேசன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்; பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தல்.

◼️சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி
தலைவர் கமல்ஹாசன் பரப்புரை;
நேர்மையை நோக்கிய மாற்றத்திற்கு
தமிழகம் தயாராகி வருவதாக பேச்சு.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18.50 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,850,202 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 85,484,966 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60,438,924 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,022 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

◼️இதுவரை உலகில் குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

◼️மெக்ஸிகோவில் ஃபைஸா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

◼️சீனாவின் வடக்கு சீனாவின் ஜின்செங், வடக்கு சீனாவின் ஷாங்க்க்ஷி மாகாணம் ஆகிய இடங்களில் இருந்து தானியங்கி கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா தொற்று.

◼️பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான அவதூறுக் கருத்துகளை எதிா்க்கட்சியினா் கூறினால், அவா்கள் மீது 72 மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அநத நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் அகமது எச்சரித்துள்ளாா்.


⚽விளையாட்டுச் செய்திகள்

◼️ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages