காலை செய்திகள் 03/01/2021 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 3, 2021

காலை செய்திகள் 03/01/2021

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️January 03,2021🗓️
    🔒Lockdown : Day 2️⃣8️⃣5️⃣  
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 86.51(↔️)
  🚚DIESEL -  79.21(↔️)

◼️நாட்டு மக்கள் அனைவருக்கும்
கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசம்;
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு.

◼️கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில்
பயன்படுத்த மத்திய அரசு அனுமதி; மேலும்
ஒரு தடுப்பூசியை பயன்பாட்டுக்கு
கொண்டு வரவும் நிபுணர் குழு பரிந்துரை.

◼️புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம்
விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள்
நிவாரணம்; வரும் 7-ம் தேதி முதல்
வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

◼️வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழக
சட்டமன்றத் தேர்தல் நடைபெற
வாய்ப்பு உள்ளது: முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி தகவல்.

◼️தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே,
பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்; 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

◼️தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது
TNPSC குரூப்-1 தேர்வு; மொத்தம்
66 பணியிடங்களுக்கு இரண்டரை லட்சம்
பேர் போட்டி.

◼️தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களின் பட்டியலை விரைவில் இறுதி செய்து ஒப்படைக்க பள்ளி தலைமை ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு; 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தல்.

◼️ஜனவரி 5-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

◼️இமாச்சலத்தில் கடும் பனிப்பொழிவு, நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிப்பு - சுமார் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு.

◼️சேலம் மற்றும் காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஜனவரி 3,4,5,6 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்.

◼️மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,843,313 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 84,975,277 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60,093,000 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,06,561 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

◼️அமெரிக்காவில் சுமார் 4.2 மில்லியன் COVID-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

◼️சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, தைவான் விடுத்த அழைப்பை, சீனா நிராகரித்துள்ளது.

◼️யுரேனியம் செறிவூட்டப்படும் அளவை 20 சதவீதமாக உயா்த்த திட்டமிட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

◼️ஆப்பிரிக்க நாடான நைஜரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 80க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.


⚽விளையாட்டுச் செய்திகள்

◼️கொரோனா விதிமுறைகளை மீறிய 5 பேரை தனிமைப்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

◼️2021-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட போவதில்லை -டேல் ஸ்டெயின்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages