காலை செய்திகள் 01/01/2021 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 1, 2021

காலை செய்திகள் 01/01/2021

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️January 01,2021🗓️
    🔒Lockdown : Day 2️⃣8️⃣3️⃣  
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 86.51(↔️)
  🚚DIESEL -  79.21(↔️)

◼️பிறந்தது 2021 புத்தாண்டு; ஆட்டம்,
பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றை
புதுச்சேரி மக்கள், கடற்கரையில் கேக்
வெட்டி உற்சாக கொண்டாட்டம்.

◼️புத்தாண்டையொட்டி மத வழிபாட்டு
தலங்களில் சிறப்பு வழிபாடு; வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலியில்
5000 பேர் பங்கேற்பு.

◼️அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள்
முரண்பாடு இல்லை; திருச்சி தேர்தல்
பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி விளக்கம்.

◼️நாடு முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடக்கம்;
முதற்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி
செலுத்த தமிழக அரசு திட்டம்.

◼️தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு; காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை.

◼️தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை
முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை;
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா
சாஹு தகவல்.

◼️இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


🌍உலகச்செய்திகள்

◼️சீனாவில் உருமாறிய கொரோனோவின் முதல் தொற்று  உறுதி செய்யப்பட்டது.

◼️சினோபார்ம் நிறுவனம் தடுப்பூசிக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் நிர்வாகம் நேற்று ஒப்புதல்.

◼️இங்கிலாந்தின் வடகிழக்கு, தென்மேற்கு பகுதிகள் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் நான்கடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

◼️இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 55,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

◼️ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓமனில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

◼️ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வா்த்தக ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

◼️சினாவின் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்க 1,095 கோடி ருபாய் நிதியை ஒதுக்கியது பாகிஸ்தான் அரசு.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages