📰🌅காலை செய்திகள்🌤📰
🗓️December 31,2020🗓️
🔒Lockdown : Day 2️⃣8️⃣2️⃣
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 86.51(↔️)
🚚DIESEL - 79.21(↔️)
◼️விவசாயிகளுடன் நடைபெற்ற 6-வது கட்ட
பேச்சுவார்த்தையில் 2 கோரிக்கைகளில்
உடன்பாடு; அடுத்த கட்ட பேச்சுவார்த்தை
ஜன-4ஆம் தேதி நடைபெறும் என தகவல்.
◼️விரைவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான
பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன்;
தமிழக துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு.
◼️விவசாயம் முதல் விண்வெளி வரை
பெண்களுக்கு சம உரிமை அளிக்க
வேண்டும்; தேர்தல் பரப்புரையில் மக்கள்
நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு.
◼️தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு
தடை விதிக்கப்பட்டதன் எதிரொலி;
சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூடுவதை
தடுக்க கண்காணிப்புகள் தீவிரம்.
◼️அரசு டோக்கன்களுக்கு மட்டுமே ரேசன்
கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக
அரசு விளக்கம்.
◼️கொரோனா பரவலால் டெல்லி, கேரளாவிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாநில அரசுகள் தடை விதிப்பு.
◼️சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி இன்று வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
◼️குஜராத்தின் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு
டெல்லியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
🌍உலகச்செய்திகள்
◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18.10 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,810,524 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 83,024,651 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 58,823,109 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,386 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
◼️அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு ஒரே வாரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
◼️பாஸ்மதி அரிசிக்கான புவிசார் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் இந்தியா விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானும் பாஸ்மதி அரிசிக்கான உரிமையை கோரி வருகிறது.
◼️சைபீரியா நாட்டில் வாழும் நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் -45 டிகிரி செல்ஸியஸ் நிலவியதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்தரத்தில் முட்டையும், நூடுல்ஸும் நிற்பது போன்ற ஒரு உணர்வை தரும் இந்த புகைப்படம் நெட்டிசன்களிடையே தற்போது அதிகம் லைக்குகளை அள்ளியுள்ள நிலையில் வைரலாகி வருகிறது.
◼️அரசுக்கு எதிராக செயல்படுவதாக சவுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான பெண்மணிக்கு ஹத்லோல் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
◼️திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று அறிவித்ததால் தமிழ்நாடு தப்பிப் பிழைத்துள்ளது என இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️இந்தியா - ஆஸி. இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி சிட்னியில் நடைபெறும் என்று ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியான நிலையில் ஆஸி. கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
◼️ வங்கதேசத்துக்கு எதிரான தொடர்: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர், பொல்லார்ட், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், காட்ரெல் உள்பட 10 முன்னணி வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
No comments:
Post a Comment