காலை செய்திகள் 30/12/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 30, 2020

காலை செய்திகள் 30/12/2020

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️December 30,2020🗓️
    🔒Lockdown : Day 2️⃣8️⃣1️⃣  
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 86.51(↔️)
  🚚DIESEL -  79.21(↔️)

◼️வேளாண் சட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 6 -வது கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.

◼️இங்கிலாந்தில் இருந்து வந்த மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி. நேற்று வரை ஆறு பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

◼️உருமாற்றம் பெற்ற கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் உதவும் என்று மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர்  உறுதியளித்துள்ளார்.

◼️தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான சர்வதேச கூட்டமைப்பின்  உறுப்பினராக டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

◼️தேவைப்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் - பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.

◼️யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமான நீலகிரி மலை ரயில் சேவை நாளை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் திரு பியூஷ்கோயல் அறிவித்துள்ளார்.

◼️பணியில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால் அதை விபத்தாக தான் கருத வேண்டும்: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

◼️இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன்- தமிழருவி மணியன்.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,794,893 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 82,276,966 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 58,302,837 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 105,944 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

◼️அமெரிக்காவில் பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கண்டறியப்பட்ட தடுப்பூசியை கமலா ஹாரிஸ் போட்டுக் கொண்டார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

◼️தென் ஆப்பிரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஜனாதிபதி சிரில் ரமபோசா புதிய கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

◼️கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடரும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

◼️குரோஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


◼️ ஆஸ்திரேலியக் எதிரான 2வது கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages