காலை செய்திகள் 29/12/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 29, 2020

காலை செய்திகள் 29/12/2020

📰🌅காலை செய்திகள்🌤📰
        🗓️December 29,2020🗓️
    🔒Lockdown : Day 2️⃣8️⃣0️⃣  
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
  🚕PETROL - 86.51(↔️)
  🚚DIESEL -  79.21(↔️)

◼️நாடு முழுவதும் ஜனவரி 31 வரை
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு;
கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை
கடுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தல்.

◼️இங்கிலாந்தில் இருந்து பரவும் கொரோனா தொற்று எதிரொலி; தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

◼️அதிமுகவின் 2ம் கட்ட தேர்தல் பரப்புரை
இன்று தொடக்கம்; வெற்றிநடைபோடும்
தமிழகம் என்ற பெயரில் பரப்புரை
மேற்கொள்கிறார் முதல்வர் பழனிசாமி.

◼️தமிழகத்தில் புதிதாக 1005 பேருக்கு
கொரோனா தொற்று; பரிசோதனை
செய்யப்பட்டவர்களில் 1.59 சதவீதம்
பேருக்கு பாதிப்பு உறுதியானது.

◼️வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் போராட்டம்; நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு அரசு அழைப்பு.

◼️8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்: சேலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரம்.

◼️நாட்டின் இளம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி பதவியேற்பு: திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்ற ஆர்யா ராஜேந்திரனுக்கு
அரசியல் தலைவர்கள் வாழ்த்து.

◼️அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளுக்கு இணையவழியில் பொதுத் தகுதி தேர்வு - அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.

◼️தெலுங்கு நடிகர் ராம்சரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி; வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,780,850 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 81,651,939 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 57,732,324 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 105,705 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

◼️இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 357- பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,329,730- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  71,109- ஆக உள்ளது. 

◼️திபெத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கவும், சீனாவின் எந்த தலையீடும் இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை திபெத் புத்த மதத்தினர் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெறும்சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டார்.

◼️சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில், வுஹானிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை வெளியிட்டதாக ஜாங் ஜான் என்னும் பெண் பத்திரிக்கையாளர் மீது சீன அரசு நான்கு பத்திரிகையாளர்களை கைது செய்தது.

◼️தென் ஆப்பிரிக்கவில் உருமாற்றம்  அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ்  தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  அந்நாட்டில்  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  ஊரடங்கு மூன்று மடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. 


⚽விளையாட்டுச் செய்திகள்

◼️ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 70 ரன்கள் இலக்கு.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages