📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️November 10,2020🗓️
🔒Lockdown : Day 2️⃣3️⃣1️⃣
🌡️வெப்பநிலை🌪️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️பீகார் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 243 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
◼️ 9 முதல் 12-ம் வகுப்பு வரை திட்டமிட்டபடி
பள்ளிகள் திறக்கப்படுமா? கருத்துக்கேட்பு
கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள்
ஆதரவு என தகவல்.
◼️கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
◼️கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள்; ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு: விதிகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தல்.
◼️லடாக் பிரச்னைக்குப் பின்னர் பிரதமர் மோடியும் சீன அதிபரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு.
◼️ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் பாலத்தின் மீது மிதவை மோதி விபத்து; 210
பயணிகளுடன் சென்னை செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து.
◼️நாடு முழுவதும் 56 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக.
◼️தமிழகத்தில் வருகிற 12ந்தேதி முதல் இரு தினங்களுக்கு பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
🌍உலகச்செய்திகள்
◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12.68 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,268,881 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 51,230,378 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 36,032,424 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 93,524 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
◼️அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 3வது கட்ட பரிசோதனையில் 90 சதவீதம் பலன் தருவதாக மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
◼️அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை ஒப்புக் கொள்ள டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருவதால், வெள்ளை மாளிகை நிர்வாக மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
◼️ஆர்மீனியா-அஜர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது ரஷ்யா. இன்று முதல் நிரந்தரமாக போர் நிறுத்தம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் - ரஷ்ய அதிபர் புடின்.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️மகளிர் டி20 சேலஞ்சில் சூப்பர் நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டிரையல் பிளேஸர்ஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
◼️ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
No comments:
Post a Comment