📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️November 09,2020🗓️
🔒Lockdown : Day 2️⃣3️⃣0️⃣
🌡️வெப்பநிலை🌪️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக இன்று காலை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில், தலைமை ஆசிரியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
◼️தமிழ்நாட்டில் கொரோனா தொற்று
பரவலின் தீவிரம் குறையவில்லை; அரசு
தலைமைச் செயலாளர் கே.சண்முகம்
தகவல்.
◼️எல்.முருகன் மீது வழக்குப்பதிவு:
தடையை மீறி வேல் யாத்திரை சென்ற
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மூத்த
தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது நோய் பரவல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட
3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
◼️ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 50 தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.
◼️தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற
பேச்சுக்கே இடமில்லை; அதிமுக அறுதி
பெரும்பான்மை பெறும் - அமைச்சர்
ஜெயக்குமார் திட்டவட்டம்.
◼️திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை பயணம்; வரும் 20-ம் தேதி திருக்குவளையில் தொடங்குகிறார்.
◼️பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன; 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன.
◼️உத்தரபிரதேசம் மாநிலத்தில் 614 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
◼️தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, 6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌍உலகச்செய்திகள்
◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12.61 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,261,745 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 50,722,782 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,786,979 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 92,561 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
◼️ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை ஆஸ்திரேலியா தொடங்கியது. ஆஸ்ட்ரா ஜெனிகா என்ற நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
◼️அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️IPL2020: ஐபிஎல் தொடரின் பரபரப்பான
இரண்டாவது தகுதிச் சுற்று; ஐதராபாத்
அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு
நுழைந்தது டெல்லி கேப்பிடல்ஸ்.
◼️இன்னும் 6 மாதங்களில் அடுத்த ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment