காலை செய்திகள் 08/11/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 8, 2020

காலை செய்திகள் 08/11/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
               в є є 🐝 n є w s
       🗓️November 08,2020🗓️
    🔒Lockdown : Day 2️⃣2️⃣9️⃣
         🌡️வெப்பநிலை🌪️        
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
   🚕PETROL - 84.14(↔️)
   🚚DIESEL -  75.95(↔️)

◼️அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி; மூன்று நாட்களாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்தது.

◼️துணை அதிபராகிறார் இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்;
அமெரிக்க வரலாற்றில் முதல் பெண்
துணை அதிபராக தேர்வாகி சாதனை.

◼️அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

◼️பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும்
அதிபர் ட்ரம்ப்; வாக்கு எண்ணும் மையத்தில்
தேர்தல் பார்வையாளர்களை
அனுமதிக்கவில்லை என புகார்.

◼️எதிராளிகளை விரோதிகளாக கருதும் போக்கு முடிவுக்கு வர வேண்டும், இணைந்து செயல்பட ட்ரம்புக்கு அழைப்பு - ஜோ பைடன்.

◼️நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும்
மாநிலமாக தமிழகம் தேர்வு; நதிகளை
மீட்பதில் வேலூர், கரூர் மாவட்டங்கள்
முதலிடம் - மத்திய அரசு அறிவிப்பு.

◼️மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களில் தவறு இருந்தால் இ-மெயில் மூலம் திருத்திக் கொள்ளலாம்; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

◼️பீகாரில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்.

◼️2021ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் : புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு.

◼️தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக ,பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages