📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️November 07,2020🗓️
🔒Lockdown : Day 2️⃣2️⃣8️⃣
🌡️வெப்பநிலை🌪️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை
குறித்து பேச திமுகவுக்கு எந்த உரிமையும்
இல்லை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கடும் தாக்கு.
◼️தடையை மீறி வேல் யாத்திரை செல்ல
முயன்றதாக பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு; வேல் யாத்திரை தொடரும் என பாஜக அறிவிப்பு.
◼️இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49
ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது;
10 செயற்கைகோள்களுடன் விண்ணில்
செலுத்த ஏற்பாடு.
◼️பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இன்று
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு; 78 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
◼️கொரோனா முன்னெச்சரிக்கையாக ஆண்டு இறுதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என, ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது.
◼️இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் இடையே 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில், இருதரப்பிலும் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தகவல்.
◼️அதிபர் தேர்தல் முடிவுகளால், இந்தியா- அமெரிக்கா உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
◼️அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
🌍உலகச்செய்திகள்
◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,247,971 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 49,645,178 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,242,589 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,742 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
◼️அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி இலக்கை நெருங்கியுள்ள ஜோ பைடன்; ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த திடீர் உத்தரவு.
◼️கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியும் என்றும் உலகம் அடுத்த தொற்றுநோய்க்கு தயாராக வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
◼️உலகின் முதல் நாடாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.
◼️ரஷ்ய அதிபர் புதின் உடல் நிலை காரணமாக பதவியில் இருந்து விலக உள்ளதாக வெளியான செய்திகளை கிரெம்ளின் நகரில் அரசு செய்தியாளர் டிமிட்டிரி பெஸ்கோவ் மறுத்துள்ளார்.
◼️கர்த்தார்புர் உள்ளிட்ட அனைத்து குருதுவாராக்களின் நிர்வாக அதிகாரத்தை இஸ்லாமிய அமைப்பிடம் ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க, பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️IPL2020: பெங்களூரு அணிக்கு எதிரான
போட்டியில் ஐதராபாத் அணி த்ரில் வெற்றி;
2-வது தகுதி சுற்று போட்டியில் டெல்லியுடன்
மோதும் ஐதராபாத்.
No comments:
Post a Comment