காலை செய்திகள் 06/11/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 6, 2020

காலை செய்திகள் 06/11/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
               в є є 🐝 n є w s
       🗓️November 06,2020🗓️
    🔒Lockdown : Day 2️⃣2️⃣7️⃣
         🌡️வெப்பநிலை🌪️        
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
   🚕PETROL - 84.14(↔️)
   🚚DIESEL -  75.95(↔️)

◼️பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த 1010 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

◼️தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதை நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

◼️கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் 50 சதவீத வருகைப்பதிவுடன் வகுப்புகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி.

◼️இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பருவநிலை லட்சிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு  பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

◼️லடாக் எல்லைப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண இந்தியா -சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

◼️நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டிற்கான, 26 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்குகிறது.

◼️ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட 4 நாட்களில் 829 ஆசிரியர்கள் மற்றும் 575  மாணவர்களுக்கு கொரோனா.

◼️கொரோனா அறிகுறியுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

◼️ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியின் மனு மீது மும்பை உயர் நீதிமன்றம் இன்று முடிவை அறிவிக்க உள்ளது.

◼️டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.

◼️தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.


🌍உலகச்செய்திகள்

◼️அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நீடிப்பு.

◼️எதிர்வரும் குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தையொட்டி உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என சீனா கருதுகிறது. எனவே வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்குள் நுழைவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

◼️அமெரிக்க அதிபர் தேர்தலில் இரு பெரும் கட்சிகள் தவிர ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களும் வாக்குகளை பெற்றுள்ளனர்.

◼️அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பாரிஸ் ஒப்பந்தத்தில் 77 நாட்களில் அமெரிக்காவை இணைப்பதாக ஜோர்டன் தெரிவித்துள்ளார்.

◼️சாா்லி ஹெப்டோ கேலிச்சித்திர விவகாரத்தில் துருக்கி அதிபா் எா்டோகன் வன்முறை உணா்வைப் பரப்பி வருவதால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

◼️கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தோனேசியாவில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார வீழ்ச்சி அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


⚽விளையாட்டுச் செய்திகள்

◼️ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது மும்பை அணி: டெல்லி  அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.

◼️ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று இரவு 7. 30 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில், புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages