காலை செய்திகள் 05/11/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 5, 2020

காலை செய்திகள் 05/11/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
               в є є 🐝 n є w s
       🗓️November 05,2020🗓️
    🔒Lockdown : Day 2️⃣2️⃣6️⃣
         🌡️வெப்பநிலை🌪️        
      ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
   🚕PETROL - 84.14(↔️)
   🚚DIESEL -  75.95(↔️)

◼️தமிழகத்தில் தள்ளிப் போகுமா பள்ளிகள்
திறப்பு? வரும் 9-ந் தேதி கருத்து கேட்புக் கூட்டம் என பள்ளிக்கல்வித்துறை
அறிவிப்பு.

◼️ஆந்திராவில் 150 ஆசிரியர்கள் மற்றும்
10 மாணவர்களுக்கு கொரோனா
தொற்று; பள்ளிகளை திறந்த 3-வது
நாளில் நடந்த விபரீதம்.

◼️வரும் சட்டப் பேரவைத் தேர்தலில்
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியா?;
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
முடிவு என தகவல்.

◼️பீகாரில் 3-ம் கட்டத் தேர்தலை முன்னிட்டு
சூடுபிடிக்கும் பிரச்சார களம்; பாஜக,
காங்கிரஸ் தலைவர்கள் தீவிர வாக்கு
சேகரிப்பு.

◼️இந்திய ராணுவத்தில் அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க ராணுவ விவகாரங்கள் துறை பரிந்துரைத்துள்ளது.

◼️பாஜக அறிவித்துள்ள வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்குகள் தொடர்பாக  உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

◼️மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கைதான ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கை 2018ல்  தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கைதானார் அர்னாப்.

◼️பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள், இந்தியா வந்தடைந்தன.

◼️தமிழ் வழியில் பயில்வோருக்கு இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் -1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்காலத் தடை விதிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

◼️சிறப்பு முகாம் நடைபெறும் நாளில் வாக்காளரை சேர்த்தல், நீக்கல் பணியை முடித்து விபரங்களை தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும் - ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.

◼️இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனே தடைசெய்ய வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,229,564 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 48,388,744 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 34,633,686 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 89,192 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

◼️அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 264 வாக்குகளுடன் முன்னிலை. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களில் முன்னிலை. பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை.

◼️அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை; கலிபோர்னியா, வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்களை கைப்பற்றினார்.

◼️ஜனநாயகக் கட்சியின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர டிரம்ப் திட்டம்.


⚽விளையாட்டுச் செய்திகள்

◼️இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் பிளேஆப் போட்டியில், மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages