📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️November 04,2020🗓️
🔒Lockdown : Day 2️⃣2️⃣5️⃣
🌡️வெப்பநிலை🌪️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம் என முடிவு. பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது குறித்து அரசு சார்பில் இன்று அறிக்கை வரவுள்ளது.
◼️லடாக் எல்லைப் பிரச்சனையில் சுமுக தீர்வு காண்பதற்காக, இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
◼️இந்திய விமானப்படைக்காக பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இன்று மாலை இந்தியா வருகை.
◼️ஆன்லைன் ரம்மி விளையாட்டால்
தொடரும் தற்கொலைகள்; கோவையில்
இன்று ஒரே நாளில் இரு இளைஞர்கள்
உயிரை மாய்த்த துயரம்.
◼️தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை
செய்யக்கோரி வழக்கு; விளம்பரங்களில்
நடித்த பிரபலங்களுக்கு உயர்நீதிமன்ற
மதுரை கிளை நோட்டீஸ்.
◼️அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு
அந்தஸ்து வேண்டாம் என மத்திய
அரசுக்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக
கடிதம்.
◼️பீகார் இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார்
வாக்குகள் பதிவு; அம்மாநில
முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கூட்டத்தில்
வெங்காயம் வீச்சு.
◼️பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் 2 ஆண்டுகளாக ஆளுநர் தாமதம் செய்வது ஏன்? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.
◼️சென்னையில் கட்டட தொழிலாளர்களின் பணியிடங்களுக்கே சென்று உணவு வழங்கும் நடமாடும் அம்மா உணவகத்தின் சேவையை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
🌍உலகச்செய்திகள்
◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,219,603 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 47,827,309 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 34,326,058 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 87,992 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
◼️ அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை.
◼️பிரிட்டனில் உச்சக்கட்ட பாதுகாப்பு அவசர நிலை அறிவிப்பு. தீவிரவாத தாக்குதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது என்கிற நிலையை அறிவித்துள்ளது பிரிட்டன் அரசு.
◼️மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து பிரான்ஸ் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
◼️பொருளாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் எவரெஸ்ட் சிகரம் உட்பட, மலையேற்ற சாகச பயணங்களுக்கு நேபாள அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️ஐபிஎல்: மும்பைக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி.
No comments:
Post a Comment