காலை செய்திகள் 10/10/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 10, 2020

காலை செய்திகள் 10/10/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
              🗓️October 10,2020🗓️
         🔒Lockdown : Day 2️⃣0️⃣0️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞34°C⬆️      ❄24°C⬇️
        ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 84.14(↔️)
   🚚DIESEL -  75.95(↔️)

◼️மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்
உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட
தலைவர்கள் இறுதி அஞ்சலி; பாட்னாவில்
இன்று இறுதி சடங்குகள் நடத்த ஏற்பாடு.

◼️முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவின்
சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு
அரசின் முயற்சிகளே காரணம்; முதல்வர் பழனிசாமி பெருமிதம்.

◼️தமிழகத்தில் 16 மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு
மையம் தகவல்.

◼️விவசாயிகளை தீவிரவாதிகள் என
திட்டியதாக புகார்; நடிகை கங்கனா
ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்ய
நீதிமன்றம் உத்தரவு.

◼️தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை  இன்று முதல் தொடங்குகிறது.

◼️சீனாவுடன் நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள, முழு துருப்புகளையும் பின்வாங்குமாறு வலியுறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

◼️டெல்லியில் காற்று மாசைக் குறைக்க மற்ற மாநிலங்கள் உதவி செய்யவில்லை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

◼️ஏப்ரல்-செப்டம்பரில் 3,951 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றம்-நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம்.

◼️இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கூட, பயண டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

◼️ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

◼️டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் நேற்று அசென்ச்சர்  நிறுவனத்தை முந்தி, உலகின் மிக மதிப்புமிக்க ஐ.டி நிறுவனமாக மாறியது.


🌍உலகச்செய்திகள்

◼️உலகின் பல பகுதிகளில் கடந்தாண்டு இறுதியிலேயே  கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், சீனா தான் முதல் நாடாக பாதிப்பை அறிவித்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

◼️சிலி நாட்டில் அடுத்தடுத்து 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு.

◼️ரசாயன ஆயுதங்களால் செயற்பாட்டாளர்கள் கொலை-பாகிஸ்தான் மீது பலூசிஸ்தான் தேசியத் தலைவர் குற்றச்சாட்டு.

◼️இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.


விளையாட்டுச் செய்திகள்

◼️பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு, உலகின் நம்பர் ஒன் வீரரான நோவோக் ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

◼️ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages