📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️October 06,2020🗓️
🔒Lockdown : Day 1️⃣9️⃣6️⃣
🌡️வெப்பநிலை🌪️
🌞37°C⬆️ ❄25°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
◼️மாநிலங்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக ரூ.20,000 கோடியை வழங்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
◼️தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத் தோ்வுகளைத் தள்ளிவைப்பது போன்ற விஷயங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளாா்.
◼️மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் இல்லை - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்.
◼️செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சர்வதேச மையமாக இந்தியா மாறவேண்டும் - பிரதமர் மோடி.
◼️லடாக் பகுதியில் இன்று அதிகாலை 5.13 மணியளவில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவு.
◼️திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க மாவட்டம்தோறும் சிறப்பு தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
◼️வங்க கடலில் வருகிற 9-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
🌍உலகச்செய்திகள்
◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.45 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,45,825 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 35,692,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,858,391 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,785 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
◼️அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பினார்.
◼️இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டு வெளியுறவுஅமைச்சர்கள் பங்கேற்கும், குவாட் நாடுகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment