காலை செய்திகள் 05/10/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 5, 2020

காலை செய்திகள் 05/10/2020


📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
              🗓️October 05,2020🗓️
         🔒Lockdown : Day 1️⃣9️⃣5️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞37°C⬆️      ❄25°C⬇️
        ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 84.14(↔️)
   🚚DIESEL -  75.95(↔️)

◼️மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்து முடிவு செய்வதற்காக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது.

◼️ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த சந்திப்பின் பொது, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்குவார் என கூறப்படுகிறது.



◼️உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு இன்று மாலை ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் பேரணி நடைபெறுகிறது.

◼️பீகார் சட்டமன்றத் தேர்தல் குறித்து  பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு.

◼️ஜூலை 2021-க்குள் நாட்டில் 20 முதல் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

◼️வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதா காங். ஆளும் மாநிலங்கள் அதிரடி முடிவு: பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகிறது.

◼️ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்; 40 நாளில் தேர்வு முடிவு.

◼️வாடிக்கையாளர்களின் பணப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டெபிட், கிரெடிட் கார்டுகள்வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கிபுதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.

◼️வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகிற 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.41 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,41,538 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 35,387,541 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,609,676 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,423 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

◼️கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

◼️இந்திய-பசிபிக் பகுதியில் சீனா சட்டவிரோத நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும் நிலையில், விரைவில் நடக்கவுள்ள நான்கு நாடுகள் சந்திப்பில், அதை தடுப்பது குறித்து இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியன விவாதிக்க உள்ளன.

◼️பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ என்ற சக்தி வாய்ந்த புயல் சின்னாபின்னமாக்கி விட்டது. மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டியதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


விளையாட்டுச் செய்திகள்

◼️ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


◼️ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages