காலை செய்திகள் 03/10/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 3, 2020

காலை செய்திகள் 03/10/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
              🗓️October 03,2020🗓️
         🔒Lockdown : Day 1️⃣9️⃣3️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞36°C⬆️      ❄25°C⬇️
        ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 84.14(↔️)
   🚚DIESEL -  75.95(↔️)

◼️கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று காலை 9 மணி முதல் இம்மாத இறுதி வரை மாநிலம் தழுவிய 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

◼️இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து உலக அளவில் கொரோனா தொற்றால், 1 லட்சம் உயிரிழப்புகளை சந்தித்த 3வது நாடு எனும் மோசமான இடத்தை இந்தியா அடைந்துள்ளது.

◼️இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான சுரங்கப்பாதையை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

◼️தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. திருவள்ளூர்  புதுச் சத்திரத்தில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மாநிலம் முழுவதும் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண்  சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

◼️ஸ்டாலின் உள்பட 200 பேர் மீது திருவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு. தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதால் நடவடிக்கை.

◼️சென்னையில் அக்டோபர் 5ம் தேதி முதல் புறநகர் ரயில்சேவை தொடக்கம். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி.

◼️மொபைல் போன்களின் விலை 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

◼️கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர்.

◼️2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

◼️சென்னையில் கொரோனா தொற்று குறைந்தபோது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளே இல்லாமல் இருந்தது. தற்போது நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் புதிதாக 10 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

◼️அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க சமரச முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,32,712 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 34,817,852 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,885,375 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,237 (பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

◼️ அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும், அவர் மனைவிக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று தெரிய வந்துள்ளது. இதனை அவருடைய குடும்ப மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

◼️நானும் எனது மனைவியும் நலமுடன் உள்ளோம். எங்கள் உடல்நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. தற்போது நாங்கள் இருவரும் வால்டர் ரீட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளோம் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

◼️அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் ஹெச்-1பி, ஹெச்-2பி நுழைவு இசைவு (விசா) அளிப்பதை நிறுத்தி வைத்து அதிபா் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்த நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.


விளையாட்டுச் செய்திகள்

◼️ஐபிஎல் 2020: டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

◼️ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள்: பெங்களூரு - ராஜஸ்தான்(3:30PM), கொல்கத்தா - டெல்லி(7:30PM) அணிகள் மோதல்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages