காலை செய்திகள் 02/10/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 2, 2020

காலை செய்திகள் 02/10/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
              🗓️October 02,2020🗓️
         🔒Lockdown : Day 1️⃣9️⃣2️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞37°C⬆️      ❄25°C⬇️
        ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 84.14(↔️)
   🚚DIESEL -  75.95(0.15⬇️)

◼️தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை”  திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும்.

◼️இந்தியாவில் 52,73,201 பேர் கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மத்திய குடும்பநல அமைச்சகத்தின் தரவுகளின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 85,376 பேர் குணமடைந்துள்ளனர். மீட்பு வீதம் 83.53 சதவீதமாக ஆக உள்ளது.

◼️தமிழகம் முழுவதும் ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டத்தை வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் கீழ், வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு மட்டுமே பயோ-மெட்ரிக் அடிப்படையில் பொருள்கள் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ளோருக்கு ஏற்கெனவே இருக்கும் நடைமுறையிலேயே பொருள்கள் அளிக்கப்பட உள்ளது.

◼️மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறையவுள்ளது. வளமான இந்தியாவை உருவாக்குவதில் மகாத்மாவின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும் - பிரதமர் மோடி.

◼️இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான குழுவின் (WMCC) 19 ஆவது கூட்டம் நடைபெற்றது.

◼️சமூக வலுவூட்டலுக்கு பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டை, வரும் 5ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

◼️ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட 200 பேர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு- கவுதம் புத் நகர் போலீசார்.

◼️உ.பி.யில் ராகுல், பிரியங்கா கைதை கண்டித்து கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.பி.ஜோதிமணி கைது.

◼️ஆந்திராவில் வரும் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

◼️வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: விவசாயிகளின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு தயார்- அமைச்சர் ராஜ்நாத்சிங்.

◼️மோட்டார் வாகனச் சட்டத்தில் செய்யப்பட்டு உள்ள புதிய மாற்றங்கள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, வாகன ஓட்டிகள், வாகனத்துக்கான அசல் சான்றிதழ்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. ஆவணங்களின், 'டிஜிட்டல்' பிரதிகள் இருந்தால் போதுமானது.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,23,683 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 34,463,930 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,647,631 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,084 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

◼️ஆர்மீனியா, அஜர்பைஜான் மோதலை அடுத்து, கராபக் (Karabakh) பகுதியில் 'உடனடியாக' போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென்று அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.

◼️அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிக்காமல் எல்லையில் ஆக்ரமிப்பு செய்ய சீனா திட்டமிடுவதாக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

◼️கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கலிபோர்னியாவில் உள்ள சுறாமீன்களுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்த தகவலின்படி கோவிட் 19 மருந்துக்காக சுறா மீன்களின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்காக சுமார் 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

◼️அமெரிக்காவைச் சேர்ந்த 'பெக்டன் டிக்கின்சன் அண்ட் கோ' நிறுவனம், மருத்துவ கருவிகளை உற்பத்திய செய்து விநியோகித்து வருகிறது. இந்நிறுவனம் புதிய கருவி மூலம் 15 நிமிடங்களில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனையை அறிமுகப்படுத்தி உள்ளது.

◼️கொரோனாவைக் கட்டுப்படுத்திய பின்னர், சீனா 'கோல்டன் வீக்' (golden week) தேசிய விடுமுறையைத் தொடங்குகிறது


விளையாட்டுச் செய்திகள்

◼️பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி.

◼️ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages