📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️July 18,2020🗓️
🔒Lockdown : Day 1️⃣1️⃣6️⃣
🌡️வெப்பநிலை🌪️
🌞35°C⬆️ ❄25°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 83.63(↔️)
🚚DIESEL - 78.50(0.13⬆️)
◼️தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 79 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் 1,376 பேரும், மற்ற மாவட்டங்களில் 939 பேர் என இதுவரை 2,315 பேர் உயிரிழந்துள்ளனர்.
◼️தமிழகத்தின் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும், இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பப் பதிவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென உயா் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
◼️அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இணையதளம் மூலமாக மட்டுமே முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
◼️ஐ.நா. சபை பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரவு உரையாற்றினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுவதாக தெரிவித்தார்.
◼️ஜம்மு காஷ்மீரின் அம்ஷிபோரா பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
◼️இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை 7 மாதத்தில் முடித்து பிப்ரவரியில் வெளியிட இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜைடஸ் காடில்லா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனமும், ஜைடஸ் காடில்லா நிறுவனமும் மனிதனிடம் மருந்தை பரிசோதிக்கும் கட்டத்தை எட்டியுள்ளன.
◼️வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவிகித்தை வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
◼️செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ மஸ்தான் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
◼️சமூக பரவல் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
◼️சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, வியாபாரிகள் சீன மொபைல் போன்களின் உதிரி பாகங்களை இருப்பு வைக்க தயங்குகின்றனர். இதனால், அவைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
◼️கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி பெயிண்டை வீசியதாக சரணடைந்த அருண்கிருஷ்ணன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அருண்கிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
🌍உலகச்செய்திகள்
◼️உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,39,666 பேர் அதிகரித்து மொத்தம் 1,41,79,014 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,526 அதிகரித்து மொத்தம் 5,98,508 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 84,45,759 பேர் குணம் அடைந்துள்ளனர். 59,953 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
◼️தங்கள் நாட்டில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி விவரங்களை ரஷ்யா திருட முயற்சிப்பதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.
◼️பாகிஸ்தான் தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான நூர் வாலி மெஹ்சுத்தை உலகளவில் பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்துள்ளது.
◼️பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.0 ரிக்டா் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
◼️நேபாளத்தில் கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து சேவையை, அடுத்த மாதம் 5-ஆம் தேதி மீண்டும் தொடங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில், ரியல் மாட்ரிட் அணி 34வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
◼️கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தற்போது ஆக்கி போட்டிக்கான அட்டவனை நேற்று அறிவிக்கப்பட்டது.
◼️தென் ஆப்பிரிக்காவிலும் புதுமையாக 3 அணிகள் ஒரே சமயத்தில் பங்கேற்கும் 3-டி (3T Cricket) கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவெடுத்துள்ளது. இதில் டிவில்லியர்சின் டெகலாட் ஈகிள்ஸ், குவிண்டனின் மிஸ்டர் புட் கைட், கிளாசனின் அவுட்சூரன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 36 ஓவர்களே இந்தப் போட்டி 18, 18 ஓவர்களாக பிரிக்கப்பட்டு 3 அணிகளும் மோதும். ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் இறங்கலாம்.ஒவ்வொரு அணியும் 12 ஓவர்கள் விளையாடும். ஒரு அணிக்கு எதிராக 6 ஓவர்கள் ஆடிய பின் மற்றொரு அணியுடன் மீதமுள்ள 6 ஓவர்களில் ஆடும். இதன் மூலம் முதல் பாதியான 18 ஓவர்களை 3 அணிகளும் ஆடியிருக்கும்.
No comments:
Post a Comment