காலை செய்திகள் 17/07/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 17, 2020

காலை செய்திகள் 17/07/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
                 🗓️July 17,2020🗓️
           🔒Lockdown : Day 1️⃣1️⃣5️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞35°C⬆️      ❄26°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 83.63(↔️)
    🚚DIESEL -  78.37(0.15⬆️)

◼️தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சமாக ஒரு நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும்  4,549 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1,157 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 3,392 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

◼️பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி வீதம் 92.3 சதவீதம். இது கடந்த ஆண்டைவிட 1 சதவீதம் அதிகம். 

◼️பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் தேர்வு துவங்குகிறது. இதில் அனைத்து பாட தேர்வுகளையும் எழுதிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

◼️கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் இதுவரை 99 பேர், வைரஸ் தாக்கி இறந்துள்ளனர். இதனால், மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படும்படி மருத்துவ பணியாளர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

◼️லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லேவுக்கு புறப்படுகிறார். அவருடன் பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோர் உள்ளனர். அவர் இன்று லடாக் பகுதியிலும் மற்றும் நாளை ஸ்ரீநகர் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

◼️கொரோனா தொற்றை தடுக்க அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் இதே நிலைமை நீடித்தால் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் - ராகுல்காந்தி.

◼️சேமிப்பு கணக்கில் குறைந்தப்பட்ச இருப்பு தொகை மற்றும் பணம் கையாளும் கட்டணத்தை உயர்த்த வரும் 1ம் தேதி முதல் வங்கிகள் முடிவு செய்துள்ளன. 

◼️ஜம்மு - காஷ்மீர் : குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.

◼️ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு.

◼️கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுபவா்கள் , அங்கு பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு வாரத்துக்குள் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

◼️நாட்டில் தயாராகும் அனைத்து வகையான மருந்துகளுக்கும் தனித்துவமான சிங்கிள் QR குறியீடு கொடுக்கும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் ஒரு குழுவை அமைத்துள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பு ஒன்றையும் விரைவில் வெளியிட உள்ளது.

◼️ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு பேரவைத் தலைவா் அளித்திருந்த நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 போ அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனா். இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது.


🌍உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் 5,91,957 பேர் உயிரிழந்தனர்.  13,937,253 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,935 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

◼️அமெரிக்காவின் கொலராடோவில் இருக்கும் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதியான செய்தி, மனிதர்களுக்கும் பரவும் என்ற அச்சத்தை அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளது. 

◼️அமெரிக்காவுடன் ஐரோப்பிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மின்னணு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தம் செல்லாது என்று ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

◼️அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமா, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், டெல்ஸ்கா சிஇஓ எலன் மாஸ்க் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் நேற்று ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் துணை அதிபரும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான ஜோ பிடென் கணக்கையும் ஹேக்கர்கள் பிளாக் செய்துள்ளனர்.

◼️பிரேசிலில் ஒரே நாளில் 1299பேர் கொரோனாவால் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை: 76,822.


விளையாட்டுச் செய்திகள்

◼️கங்குலியின் மூத்த சகோதரரான ஸ்னேஹஷிஸ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவ்ரவ் கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages