தென் கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருகை - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 12, 2020

தென் கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருகை

கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்துள்ளது

தமிழகத்தில் கொரோனாவால் 38716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 349 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக நாள்தோறும் 1500 பேருக்கு மேல் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தால், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை கண்டறிய முடியுமென்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, நாள் தோறும் சுமார் 15 ஆயிரம் வரை கொரோனாவை கண்டறிவதற்கான பிசிஆர் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை, 20 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் மொத்தம் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் தமிழகம் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கையிருப்பில் தற்போது 4 லட்சத்து 47 ஆயிரம் பிசிஆர் கருவிகளும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே 1 லட்சத்து 8 ஆயிரம் கருவிகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


இதனிடையே, சென்னையில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டாலே பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். சென்னையில் 12 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 18 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 30 கொரோனா பரிசோதனை மையங்கள் இருப்பதாக அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages