காலை செய்திகள் 25/06/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 25, 2020

காலை செய்திகள் 25/06/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
                 🗓️June 25,2020🗓️
           🔒Lockdown : Day,9️⃣3️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞34°C⬆️      ❄25°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 83.18(0.14⬆️)
    🚚DIESEL -  77.29(0.52⬆️)

◼️கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, மண்டலங்களுக்கு இடையே இன்று முதல் 30ம் தேதி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் மட்டும் பஸ்கள் இயங்கலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் அவசியம் என்று கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

◼️கொரோனாவால் நேற்று ஒருநாள் உலகளவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்தது. கொரோனா பாதிப்பிலும், பலியிலும் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் பிரேசில், ரஷ்யா போன்றவை உள்ளன.

◼️மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து, அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா்.

◼️அரசு ஊழியர்களுக்காக 2016ல் கொண்டுவரப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் 2021 ஜூன் 30 வரை ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

◼️2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்ககை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

◼️சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதித் திட்டம்: நிதின் கட்கரி தொடக்கி வைத்தார்.

◼️மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் நேற்று சைக்கிள் பேரணி நடத்திய நிலையில், அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

◼️விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

◼️இந்தியாவில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.


🌍உலகச்செய்திகள்

◼️உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,525,937 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 484,925 பேர் உயிரிழந்த நிலையில் 5,174,686 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,418 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

◼️ஐரோப்பாவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.89 லட்சம் ஆக உயர்ந்தது. 23.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

◼️கொரோனா நோய்த்தொற்று (கொவைட்}19) அபாயத்தை எதிர்கொள்வதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

◼️சீனாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை, பேச்சுவார்த்தை மூலம்' திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேபாள எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் எம்பிக்கள் 3 பேர் அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.'

◼️வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages