காலை செய்திகள் 23/06/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 23, 2020

காலை செய்திகள் 23/06/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
                 🗓️June 23,2020🗓️
           🔒Lockdown : Day,9️⃣1️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞36°C⬆️      ❄26°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 83.04(0.17⬆️)
    🚚DIESEL -  76.77(0.47⬆️)

◼️மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை. மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

◼️மதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில், இன்று காய்கறிகளின் விலை கடும் உயர்வு.

◼️கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் இதில் சுமார் 4லட்சத்து 74 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

◼️புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டன.

◼️இந்திய - சீன எல்லையில் இருநாட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டநிலையில், சீன நிறுவனங்கள் உடனான ரூ5000 கோடி ஒப்பந்தத்தை மகாராஷ்டிரா அரசு முடக்கியுள்ளது. 

◼️காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்-வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெறும் கூட்டத்தில்  கொரோனா விவகாரம், இந்திய சீனா எல்லை பிரச்சினை, காங்கிரசின் புதிய தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

◼️தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ7000 அதிகரித்துள்ளது. சவரன் ரூ37 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

◼️சீன ராணுவத்துடன் மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவியை துணை கலெக்டராக நியமனம் செய்துள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

◼️இந்திய சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு மத்தியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவின் வெற்றி நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஷ்யா தலைநகர் மாஸ்கோ விரைந்துள்ளார்.


🌎உலகச்செய்திகள்

◼️உலகளவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 91,87,259 ஆக உயர்வு. கொரோனாவால் 4,74,307 பேர் உயிரிழப்பு; 49,37,181 பேர் குணமடைந்தனர்.

◼️நேபாள் நாட்டு ஆடவரை அயல்நாட்டுப் பெண் திருமணம் செய்து கொண்டால் அந்த அயல்நாட்டுப் பெண்ணுக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகே குடியுரிமை வழங்கப்படும் சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

◼️கொரோனா நோய்த்தொற்று விவகாரம், ஹாங்காங் மீது அதிகரிக்கும் சீனாவின் கட்டுப்பாடு ஆகிய காரணங்களால் தங்களுக்கு இடையே எழுந்துள்ள பதற்றத்தை குறைக்கவும், வர்த்தகத்தை அதிகரிக்கவும் ஐரோப்பிய யூனியன்-சீனா இடையே திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

◼️கொரோனா நோய்த்தொற்றானது சீனாவை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தயாரிப்பாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகைக்கான வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கூறினார்.

◼️இஸ்ரேலில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்காவிட்டால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளாா்.


விளையாட்டுச் செய்திகள்

◼️பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages