காலை செய்திகள் 14/06/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 14, 2020

காலை செய்திகள் 14/06/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
                 🗓️June 14,2020🗓️
           🔒Lockdown : Day,8️⃣2️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞37°C⬆️      ❄27°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 79.53(0.54⬆️)
    🚚DIESEL -  72.18(0.54⬆️)

◼️கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

◼️தில்லியில் கொரோனா நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் ஆகியோா் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனா்.

◼️இணையவழி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்தக்கூறி பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது. அரசாணை விதிகளை மீறி கல்விக்கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை என தனியார் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

◼️வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

◼️அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கணித ஆசிரியா்களை திறன் மிக்கவா்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்பு பயிற்சிக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

◼️கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள்மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக வேட்பாளர்கள் இருவர் உட்பட நால்வரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

◼️தென்னக ரயில்வேயில் 96 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், தமிழர்கள் வெறுமனே 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தென்னக ரயில்வேயின் தமிழர் விரோதப் போக்கைக் காட்டுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.

◼️மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர். அவர்களை விழுப்புரம் ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் ககண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு சிறப்புத் பேருந்துக்கள் மூலம் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

◼️பி.எம். கேர்ஸ் நிதியை பேரிடர் மேலாண்மை நிதிக்கு பரிமாற்றம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.

◼️கடந்த மே 1-ஆம் தேதி வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் பணப்பலன்களை வழங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


🌍உலகச்செய்திகள்

◼️உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,28,403 பேர் அதிகரித்து மொத்தம் 78,55,496 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,039 அதிகரித்து மொத்தம் 4,31,728 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 40,22,204 பேர் குணம் அடைந்துள்ளனர். 54,068 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

◼️சீன அரசுக்கு ஆதரவாகவும் ஹாங்காங் போராட்டம் குறித்தும், கொரோனா குறித்தும் தவறான தகவல்களை பரப்பிய குற்றத்திற்காக ட்விட்டரில் இருந்து 1,76,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

◼️வெல்ல முடியாத எதிரியாக விளங்கும் கொரோனா வைரசை அமெரிக்கா விரைவில் வீழ்த்தும் என்று அதிபர் டிரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

◼️அமெரிக்காவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது கருப்பினத்தைச் சோந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்து அந்த நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளில் நிறவெறி எதிா்ப்பு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

◼️பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.முன்னதாக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.



⚽விளையாட்டுச் செய்திகள்

◼️இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம். அது பருவமழை காலம் என்பதால் அந்த சமயத்தில் இந்தியாவில் இந்த போட்டியை வைக்க முடியாது. அதற்கு பதிலாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம். ஒவ்வொரு அணியும் இரண்டு முறை மோதுவதற்கு பதிலாக தலா ஒரு தடவை மட்டும் மோதும் வகையில் போட்டி அட்டவணையை சுருக்க வேண்டும். இந்த வகையில் மட்டுமே இந்த ஆண்டில் ஐ.பி.எல். போட்டியை நடத்த சாத்தியம் உள்ளது. இலங்கை இல்லாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தலாம்.' என்றார்.





No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages