காலை செய்திகள் 13/06/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 13, 2020

காலை செய்திகள் 13/06/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                     в є є 🐝 n є w s
                 🗓️June 13,2020🗓️
           🔒Lockdown : Day,8️⃣1️⃣
              🌡️வெப்பநிலை🌪️        
          🌞37°C⬆️      ❄27°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
    🚕PETROL - 78.99(0.52⬆️)
    🚚DIESEL -  71.64(0.50⬆️)

◼️கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொது முடக்கம் தொடர்பாகவும் ஜூன் 16, 17ல் பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

◼️தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை மறுநாள் (15/6/2020) காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

◼️தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

◼️சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

◼️நாடு முழுக்க இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான பொது மக்கள் நடமாட்டம் தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில், விமானங்கள் மற்றும் பேருந்துகளில் வரும் பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இருக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

◼️கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிந்தால்,வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் 14 நாட் கள் இருக்க தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

◼️அதிக வேகத்தில் ஒரே கம்பியின் வழியே(டெலிகாம் வயர்) இணையதளம், தொலைக்காட்சி கேபிள், செல்போன் நெட்வொர்க் ஆகிய வற்றுக்கான இணைப்பை வழங்க புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டுள்ளது.

◼️சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி வழங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருத்துவ சிகிச்சை தொடர்பான காரணங்களுக்கு அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

◼️கடன் தவணை நிறுத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வட்டி மீது வட்டி வசூலிப்பதை தவிா்ப்பது தொடா்பாக 3 நாள்களில் ஆலோசித்து முடிவெடுக்குமாறு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ), மத்திய நிதியமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

◼️தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் 16ம் தேதி விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்.


🌍உலகச்செய்திகள்

◼️உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,31,673ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,25,273ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,28,210ஆக உயர்வு.

◼️கொரோனா வைரஸின் மூலக்கூறுகளை இஸ்ரேல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் வைரஸை ஒழிக்கும் தடுப்பு மருந்தை விரைவில் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

◼️கொரோனா நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறாா்கள், தொழிலாளராக மாறும் சூழல் உருவாகியுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

◼️ஆஸ்திரேலியாவில் நிறவெறி போராட்டத்தில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டதைத் தொடர்ந்து இது போன்ற போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

◼️ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் சீனாவின் மிரட்டல்களுக்கெல்லாம் நாம் அடிபணிய மாட்டோம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

◼️விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்களித்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி ரத்தன் லாலுக்கு (75) 'சா்வதேச உணவு விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டுச் செய்திகள்

◼️கொரோனா வைரஸ் அச்சத்தால் ஸ்பெயினில் புகழ்பெற்ற லாலிகா கால்பந்து தொடர் கடந்த மார்ச் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. தற்போது அங்கு கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் லாலிகா போட்டியை தொடர்வதற்கு ஸ்பெயின் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு லா லிகா கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. செவில்லி நகரில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் செவில்லா கிளப் 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் பீட்ஸ் அணியை தோற்கடித்தது. முதல் கோலை லுகாஸ் ஒகாம்போஸ் (56-வது நிமிடம்) பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தியும், 2-வது கோலை பெர்னாண்டோ தலையால் முட்டியும் அடித்தனர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages