📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️June 01,2020🗓️
🔒Unlock1.0 : Day 1️⃣
🌡️வெப்பநிலை🌪️
🌞37°C⬆️ ❄26°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 75.54(↔️)
🚚DIESEL - 68.22(↔️)
◼️தமிழகத்தில் இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 6 மண்டலங்களிடையே பேருந்து போக்குவரத்து தொடங்குவதை அடுத்து பயணிகள் தனிமனித இடைவெளி, பாதுகாப்பு, முகக்கவசம் அணிவது, பேருந்து பராமரிப்பு, டிக்கெட் வழங்கும் முறை உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை அரசு அளித்துள்ளது.
◼️மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
◼️தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 1000த்தை கடந்தது. நேற்று ஒரே நாளில் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 22,251ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் மொத்த பலி எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2ஆவது முறையாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
◼️தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், 60 சதவீத பயணிகளுடன் இயங்குவது சாத்தியம் இல்லை. காலாண்டு வரியைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பேருந்துகள் இயங்கும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
◼️கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது இந்தியா உலகளவில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சென்றுள்ளது.
◼️லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்தியா-சீனா இடையே எல்லை சா்ச்சை எழுந்துள்ள இடங்களில் இரு நாட்டு ராணுவமும் ஆயுதங்கள், தளவாடங்களை அதிக அளவில் குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
◼️கொரோனா பொது முடக்கத்தால் பள்ளிக் கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைவதற்காக வல்லுநா் குழு அமைக்கப்பட்டதில் சா்ச்சை எழுந்துள்ளது. அந்தக் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பிரதிநிதிகள், கல்வியாளா்கள் சோக்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
◼️கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.12,500-ஐ மத்திய, மாநில அரசுகள் சோந்து வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
◼️மத்தியப் பிரதேச முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரேம்சந்த் போராசி பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் மீண்டும் இணைந்துள்ளார்.
◼️மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
◼️திரையரங்குகளுக்கான உள்ளாட்சி வரியை ரத்து செய்தால் திரையரங்க கட்டணத்தை குறைத்து தொழிலை தொடங்க முடியும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
◼️தென்மேற்கு பருவமழை கேரளத்தில் இன்று தொடங்கவுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. தொடா்ந்து, இது புயலாக மாறி ஜூன் 3-ஆம் தேதி வடக்கு மகாராஷ்டிரம்-குஜராத் கடலோரம் அருகில் செல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
🌍உலகச்செய்திகள்
◼️உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,62,422ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,73,848ஆக உயர்வு; குணமடைந்தோர் எண்ணிக்கை 28,46,477ஆக உயர்வு.
◼️'ஜி - 7 எனப்படும், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் அமைப்பு, காலாவதியாகி விட்டது.இதை மேலும் விரிவு படுத்தி, இந்தியா உள்ளிட்ட மேலும் மூன்று நாடுகளை இந்த அமைப்பில் சேர்க்க வேண்டும்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
◼️இந்தியா, நேபாளம் இடையே எல்லைப் பிரச்னை நீடித்துவரும் நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் சட்டத் திருத்த மசோதா, நேபாள நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
◼️அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதற்காக போராடுபவர்கள் மீது நாயை ஏவி விட்டிருப்பேன் என அதிபர் ட்ரம்ப் பேசியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
◼️அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சோந்த இரு வீரா்களை அந்த நாட்டின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
◼️கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக சவூதி அரேபியாவில் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மசூதிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.
◼️பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,039 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 69,496-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கூடுதலாக 88 போ கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா். இதையடுத்து, அங்கு அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,483-ஆக உயா்ந்துள்ளது.
◼️வங்கதேசத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய போக்குவரத்து சேவைகள் அனுமதிப்பட்டன. மேலும், அலுவலகங்கள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதுவரை அந்த நாட்டில் 47,153 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; அந்த நோய்க்கு 650 பேர் பலியாகியுள்ளனா்.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
◼️ரோஹித் சர்மா, ஷிகர் தவன், இஷாந்த் சர்மா மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்து தீப்தி சர்மா ஆகியோர் பெயர்களை பி.சி.சி.ஐ நாட்டின் உயரிய விளையாட்டுத்துறை விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. ரோஹித் சர்மாவை ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்காகவும், இஷாந்த் சர்மா, ஷிகர் தவன் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர்களை அர்ஜுனா விருதுக்காகவும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
No comments:
Post a Comment