'அமெரிக்காவின் உதவி தேவையில்லை' - இந்தியாவுடனான எல்லை பிரச்னையில் டிரம்புக்கு சீனா பதில் - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 29, 2020

'அமெரிக்காவின் உதவி தேவையில்லை' - இந்தியாவுடனான எல்லை பிரச்னையில் டிரம்புக்கு சீனா பதில்


இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்ப்பதற்கு அமெரிக்காவின் உதவி ஏதும் தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு சீனா பதில் அளித்துள்ளது. முன்னதாக இந்தியா - சீனா எல்லை பிரச்னையில் அமெரிக்கா நடுவராகவோ அல்லது தூதராகவோ இருந்து இரு நாடுகளுக்கும் உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். 





லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் பெரும் ராணுவ கட்டமைப்பை அமைத்து வருகின்றன. 





பதட்டத்தை அதிகரிப்பது, இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நிலைகளை பலப்படுத்துவது என இரு நாடுகளும் ஈடுபடுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது. 





இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 'இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது. இதுபற்றி இரு நாடுகளிடமும் நாங்கள் தெரிவித்து விட்டோம். நடுவராகவோ அல்லது தூதராகவே இருந்து எல்லைப் பிரச்னையை தீர்க்கத் தயார்.'  என்று கூறியிருந்தார். 





இதனை இந்தியா ஏற்க மறுத்தது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம், 'தூதகர ரீதியில் இந்தியா - சீனா இடையிலான பிரச்னைகள் பேசப்பட்டு வருகிறது. எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன. இதுதொடர்பாக பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம். 





எல்லையில் நமது படைகள் சிறப்பாக செயல்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றன. இந்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியா தனது எல்லையையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்காது.' என்று பதில் அளித்தது.





இருப்பினும் சீனா தரப்பிலிருந்து அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பதில் ஏதும் வராமல் இருந்தது. இந்த நிலையில், டிரம்புக்கு சீனா பதில் அளித்திருக்கிறது. இதுகுறித்து அதன் வெளியுறவு செய்தி தொடர்பாளர், 'பேச்சுவார்த்தை மூலமாக சீனாவும், இந்தியாவும் தங்களுக்கு இடையிலான எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள முடியும்' என்று கூறியுள்ளார். 




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages