விகடன் விருதை திருப்பி அளிக்கும் பிரபலங்கள் - வலுக்கும் எதிர்ப்புகள் - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 22, 2020

விகடன் விருதை திருப்பி அளிக்கும் பிரபலங்கள் - வலுக்கும் எதிர்ப்புகள்

விகடன் நிறுவனம் திடீரென 176 ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது. நிறுவனத்தின் நிதிச் சிக்கலை காரணம் காட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் , இத்தனை காலம் விகடனே கதி என இருந்த ஊழியர்கள் எங்கே செல்வார்கள் என்ற எண்ணம் நிர்வாகத்துக்கு இல்லை என பலரும் புலம்புகிறார்கள்.

இந்நிலையில் ஊழியர்களின் பணிநீக்கத்தை கண்டிக்கும் விதமாக ஆவணப்பட இயக்குனர் திவ்யா பாரதி தனக்கு விகடன் கொடுத்த விருதை திருப்பி அளித்திருக்கிறார். அதே போல், காலா படத்துக்கு வசனம் எழுதி விகடன் விருது பெற்ற மகிழ்நன் தனது விருதை திருப்பி அளித்திருக்கிறார்.


திவ்யா தனது பேஸ்புக் பதிவில் “ இந்த நெருக்கடியான கொரானா காலத்தில் துளியும் அறமின்றி தங்கள் ஊழியர்கள் 176 பேரை விகடன் குழுமம் வேலையிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளதை கண்டித்து, 2013ஆம் ஆண்டு ஆனந்தவிகடனின் டாப் 10 நம்பிக்கை நபர்கள் பட்டியலில் முதல் நபராக என்னை தேர்வு செய்து ஆனந்த விகடன் குழுமம் எனக்கு விருதளித்ததை, விகடன் குழுமத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கிறேன்.” என கூறியுள்ளார்.


மகிழ்நன் தனது பதிவில் “ Divya Bharathi தோழரை பின்பற்றி எனக்கு விகடன் சார்பாக, காலா திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட விருதை திருப்பி அனுப்புகிறேன். கொரோனா பேரிடர் காலத்தில், ஊடகவியலாளர்களை கைவிடுகின்ற துரோகத்தனமான நடவடிக்கையை எதிர்க்கும்விதமாக இதை நான் செய்ய விழைகிறேன். விகடன் ஊழியர்களை வெளியேற்றுகிற இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages