உலகம் முழுவதும் கொரானாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 23, 2020

உலகம் முழுவதும் கொரானாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு


கொரோனாவின் தாக்கம் தற்பொழுது உலகளவில் 50 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், உயிரிழப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல் தாண்டி கொண்டே செல்கிறது.





உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை இன்னும் நிறுத்தவில்லை. இதுவரை 5,304,033 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 340,004 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிர் இழப்பும் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.





பாதிக்கப்பட்டவர்களில் 2,158,567 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 107,716 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 5,252 பேர் உயிரிழந்து உள்ளனர்.



தற்பொழுது பாதிக்கப்பட்டவர்களில் குணம் ஆகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர 2,156,382 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் வீட்டில் தனித்திருப்போம், விழித்திருப்போம் கொரோனா எதிர்த்து நிற்போம். மீண்டும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages