📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️May 31,2020🗓️
🔒Lockdown Count : Day 6️⃣8️⃣
UNLOCK 1.0 - 30days starts tomorrow
🌡️வெப்பநிலை🌪️
🌞38°C⬆️ ❄26°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 75.54(↔️)
🚚DIESEL - 68.22(↔️)
◼️நாடு முழுவதும் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு - மத்திய அரசு.
◼️புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை.
◼️ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
◼️தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கட்டுப்பாடுகளை தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
◼️சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
◼️ கிருஷ்ணகிரி, நீலகிரியை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் பீதி; அதிகாரிகள் ஆய்வு.
◼️தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 938 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் மட்டும் 21,184 பேர் கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 616 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறிதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 13,980ஆக அதிகரித்துள்ளது.
◼️ஜூன் 1-ஆம் தேதி முதல் தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, திருவாரூர், நாகை, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
◼️ஜூன் 30-ஆம் தேதி வரை வெளிநாட்டு விமானங்கள் சேவை ரத்து. இருப்பினும் DGCAIndia மூலம் அங்கீகரிக்கப்பட்ட சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது.
◼️பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோருடன் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி முடிவுகளை தெரிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
◼️விண்ணுக்கு செல்லும் 2 நாசா வீரர்கள். 2011ல் இருந்து தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பாத நாசா 9 வருடங்களுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக மனிதர்களை அனுப்பியுள்ளது.
◼️இரு தரப்பு ராணுவ உறவு குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் பேச்சு நடத்தியதாக, அமெரிக்கா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.அப்போது, ''இந்திய - சீன எல்லை பிரச்னையை, இரு நாடுகளுமே சுமுகமாக பேசித் தீர்ப்போம்,'' என, அமெரிக்க ராணுவ அமைச்சரிடம், ராஜ்நாத் சிங் கூறினார்.
◼️வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் நடைமுறை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார்.
◼️போக்குவரத்து கழகங்களை கண்டித்து இன்று பணிமனைகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
🌍உலகச்செய்திகள்
◼️இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இத்தாலி கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டின் வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
◼️கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
◼️ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தோதல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்தத் தோதலில் புதிய வாக்குப்பதிவு முறை கடைப்பிடிக்கப்படவுள்ளது. ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியா மட்டுமே போட்டியிடுவதால், இந்தத் தோதலில் இந்தியாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
◼️உலக சுகாதார அமைப்புடனான உறவை முற்றிலும் துண்டிப்பதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், சீனா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அவர், அந்த நாட்டின் மீது பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்.
◼️ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்தும் நிலையில் ஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
◼️ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா வருமாறு அந்நாட்டு அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துள்ளார்.
◼️உலக நாடுகளை கலக்கம் அடையச் செய்து கொண்டிருக்கும் கொரோனாவை குணப்படுத்த தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறையை உலக அளவில் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யும் வகையில் 37 நாடுகளும் உலக சுகாதார அமைப்பும் கூட்டு முயற்சியை துவங்கி உள்ளன.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்படும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மாவின் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
◼️கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், ஜூலை தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் முழு பிராந்திய கிரிக்கெட் முறையில், தற்காலிக 50 சதவீத சம்பளக் குறைப்பை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment