காலை செய்திகள் 30/05/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 30, 2020

காலை செய்திகள் 30/05/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                        в є є 🐝 n є w s
                     🗓️May 30,2020🗓️
    🔒Lockdown Count : Day 6️⃣7️⃣/68
               🌡️வெப்பநிலை🌪️        
          🌞37°C⬆️      ❄25°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
   🚕PETROL - 75.54(↔️)
    🚚DIESEL -  68.22(↔️)

◼️பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில் பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிக்க வசதியாக அரசுப் பேருந்துகளின் இருக்கைகளில் சமூக இடைவெளிக்கான ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்ற வருகிறது.

◼️கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 5.0 கட்டமாக ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தளர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

◼️தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

◼️ஜூன் 1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

◼️தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட 13 தொழில்நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

◼️கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்த வெட்டுக்கிளிகளால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், வெட்டுக்கிளிகள் வருகை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

◼️11 இலக்கத்தில் மொபைல் எண் ஒதுக்கீடு செய்ய தொலைதொடர்பு ஆணைய அமைப்பான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.

◼️இந்தியாவின் பெயரை 'பாரதம்' அல்லது 'ஹிந்துஸ்தான்' என்று பெயா் மாற்றம் செய்யக் கோரிய மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் ஜூன் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

◼️வரும் ஜுன் மாத இறுதியில் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று 2 லட்சத்தை தாண்டும் என்றும், 1,400 பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.


🌍உலகச்செய்திகள்

◼️உலகளவில் கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,26,375 ஆக அதிகரிப்பு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,66,418 ஆக உயர்வு. குணமடைந்தோர் எண்ணிக்கை 26,56,144 ஆக அதிகரிப்பு.

◼️அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 17,68,461ஆக அதிகரிப்பு. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,03,330 ஆக அதிகரிப்பு.

◼️உலக சுகாதார மையத்துடன் அமெரிக்கா உறவை துண்டிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

◼️கொரோனா வைரசின் தாக்கம் பிரேசில் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது.

◼️சீனாவில் இருக்கும் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து உறவுகளை, ஒப்பந்தங்களை நீக்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

◼️கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையேயான விமான சேவையை, பாகிஸ்தான் அரசு இ‌ன்று முதல் தொடங்க உள்ளது.


விளையாட்டுச் செய்திகள்

◼️கொரோனா தொற்று பீதி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகள் மீண்டும் ஆடுகளம் திரும்புகின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் முதல் கால்பந்து போட்டியாக ஜெர்மனியில் பண்டெஸ்லிகா தொடர் மே 17ஆம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டி ஜூன் 20ம் தேதி தொடங்க உள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages