காலை செய்திகள் 28/05/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 28, 2020

காலை செய்திகள் 28/05/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                        в є є 🐝 n є w s
                     🗓️May 28,2020🗓️
    🔒Lockdown Count : Day 6️⃣5️⃣/68
               🌡️வெப்பநிலை🌪️        
          🌞38°C⬆️      ❄27°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
   🚕PETROL - 75.54(↔️)
    🚚DIESEL -  68.22(↔️)

◼️கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜூன் 30 வரை ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காகித டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் டிக்கெட்டுகளும் செப்டம்பர் 22 வரை எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

◼️'மன் கி பாத்' ரேடியோ உரையின்போது, ஐந்தாவது கட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிடுவார் என்று வெளியான செய்தி தவறானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

◼️தமிழகத்தில் நேற்று மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18545 ஆக உயர்ந்துள்ளது.

◼️மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் எப்.எஸ்.டி.சி. எனப்படும் நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி கழகத்தின் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று நடைபெற உள்ளது.

◼️தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சாய் வர்தனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. தற்போது சிறுவன் சடலமாக மீட்பு. 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தேசியப்
பேரிடர் மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டனர்.

◼️இந்தியாவின் மேற்குப் பகுதியில் வெட்டுக் கிளிகள் பெருமளவில் பயிர்களை நாசம் செய்துவரும் நிலையில் , அந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டிற்கு இல்லையென தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது .

◼️கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அல்லது பெயரளவு கட்டணத்தில் அளிப்பதற்கான தனியாா் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

◼️தனியாா் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தத் தடையில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

◼️மாணவா்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் கல்வி நிறுவனங்கள் மாற்று வழிமுறைகளை கையாள வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.


🌎உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 356,937 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 5,784,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,494,952 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 52,973 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

◼️இந்தியப்பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய வரைபடத்துக்கு அந்நாடு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

◼️கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கு எதிராக பெல்ஜியத்தின் சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

◼️லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வுகாண மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளாா்.

◼️எல்லை விவகாரம் தொடா்பான இந்தியாவின் கொள்கைகளால் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா்.

◼️தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 50 நாள்களுக்குப் பிந்தைய அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும்.

◼️பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,466 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 59,151-ஆக அதிகரித்துள்ளது.

◼️மோசமான காலநிலை காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தள்ளி வைப்பு - நாசா


விளையாட்டுச் செய்திகள்

◼️துபாய்: ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பீதி காரணமாக அடுத்த ஆண்டு அல்லது 2022க்கு தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து இன்று ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

◼️இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடரை நடத்துவதற்கான வரிச்சலுகையை பிசிசிஐ மத்திய அரசிடம் பெறாததால், இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages