காலை செய்திகள் 27/05/2020 - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 27, 2020

காலை செய்திகள் 27/05/2020

📰🌅காலை செய்திகள்🌤📰 📣
                        в є є 🐝 n є w s
                     🗓️May 27,2020🗓️
    🔒Lockdown Count : Day 6️⃣4️⃣/68
               🌡️வெப்பநிலை🌪️        
          🌞38°C⬆️      ❄27°C⬇️
       ⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
   🚕PETROL - 75.54(↔️)
    🚚DIESEL -  68.22(↔️)

◼️ஊரடங்கை அரசு நீடிக்குமா இல்லையா என்பது குறித்து வரும் 30ஆம் தேதி அரசு முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

◼️தமிழகத்தில் நேற்று 646 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 லிருந்து 17,728ஆக அதிகரித்துள்ளது.

◼️நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த முறை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த போவதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

◼️பொதுமுடக்கத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க மருத்துவக் குழு தமிழக முதலமைச்சரிடம் பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

◼️ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பொதுப் போக்குவரத்தான பஸ்களை இயக்கினால் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்கும் என்று முதல்வருடனான ஆலோசனையின் போது மருத்துவக் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

◼️'தமிழகத்தில், வீடுகள் தவிர்த்த கட்டுமானங்களுக்கு, கட்டுமான நிறைவு சான்று வழங்கினால் மட்டுமே, மின் இணைப்பு வழங்கப்படும்' என, மின் வாரியம் அறிவித்துள்ளது.

◼️நாடு முழுவதும் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை கோடை விடுமுறைக்கு பின்பு ஜூலை மாத மத்தியில் திறக்கலாம் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு  பரிந்துரைத்துள்ளது.

◼️கடன் தவணை சலுகை காலத்தில் வட்டி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

◼️கரோனா தொற்றுக்கான சிகிச்சை தொடா்பான ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை - ஐசிஎம்ஆா்


🌎உலகச்செய்திகள்

◼️உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 24,26,560 பேர் குணம் அடைந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,725,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தான் உலகிலேயே இல்லாத புதிய உச்சமாக 100,580 பேர் உயிரிழந்துள்ளனர்.

◼️இந்தியா சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் போருக்கு தயார் ஆகுங்கள் என்று சீன நாட்டு ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்.

◼️கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாக கூறிவிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால் தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே 2வது உச்சநிலையை அடையும் என அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

◼️அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி, குரங்குகளை கொரோனா வைரசிடமிருந்து பாதுகாத்துள்ளது. இதனால், கொரோனா மருந்து கண்டுபிடிப்பதில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

◼️கொரோனா வைரசை விட வீரியம் மிகுந்த வைரஸ்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக சீனாவை சேர்ந்த பிரபல வைரஸ் பெண் ஆராய்ச்சியாளர் எச்சரித்துள்ளார்.


விளையாட்டுச் செய்திகள்

◼️வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதையொட்டி வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணி வீரர்கள் கேப்டன் ஜாசன் ஹோல்டர் தலைமையில் கிங்ஸ்டனில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் சமூக இடைவெளியுடன் பயிற்சியை தொடங்கினார்கள்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages