📣 📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️May 24,2020🗓️
🔒Lockdown Count : Day 6️⃣1️⃣/68
🌡️வெப்பநிலை🌪️
🌞39°C⬆️ ❄28°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 75.54(↔️)
🚚DIESEL - 68.22(↔️)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
◼️மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - சென்னையில் ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா
◼️நாட்டிலிருந்து கொரோனா நோய்த்தொற்று பிரச்னை முடிவுக்கு வருவதைப் பொருத்து, அடுத்தகட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
◼️பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும், என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
◼️லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகளை சீனா குவித்து வருகிறது. அதற்கு நிகராக, இந்தியாவும் தனது படைகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் தொடா்ந்து பதற்றம் நீடிக்கிறது.
◼️கவர்னரின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் 6 பி.சி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்து தலைமை செயலர் அஸ்வனி குமார் உத்தரவிட்டுள்ளார்.
◼️கொரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை ரத்து செய்யக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
◼️கொரோனா வைரசால் முடக்கப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துகள் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
◼️சிபிஐ, தலைமை கணக்கு தணிக்கையாளா், ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை தொடா்பான எந்தவித அச்சமுமின்றி தகுதி வாய்ந்த நபா்கள் அனைவருக்கும் கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
◼️சென்னை எழும்பூா், தாம்பரம் தவிா்த்து தமிழகத்துக்குள் தொடா்புடைய மற்ற முக்கிய நிலையங்களில் ஏசி இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பான கோரிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
◼️இந்தியாவில் ஒரு ஆண்டு காலத்திற்குள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பது ஒரு ஆண்டுக்குள் சாத்தியமில்லை, என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
◼️ஊதியப் பிடித்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வுகாணாவிட்டால், விமானங்களை இயக்க ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று ஏா் இந்தியா விமானிகள் எச்சரித்துள்ளனா்.
◼️உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் தெற்காசியப் பிரிவு மேலாளராக இந்திய பொருளாதார வல்லுநா் ஆபாஸ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.
◼️'கொரோனாவுக்கு எதிரான போரில் இலங்கை, மொரீஷியஸ் நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும்,' என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
◼️ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அவசரம் சட்டம் கொண்டு வந்துள்ளது.
◼️'ககன்யான்' திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, நான்கு இந்திய விண்வெளி வீரர்களுக்கும், ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்ட பயிற்சிகள், மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.
🌏உலகச்செய்திகள்
◼️சீனாவில் முதல் முறையாக மனிதா்களின் உடலில் செலுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
◼️உலகம் முழுவதும் கரோனோ நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் அதிகரித்து வரும் சூழலிலும், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது வழிபாட்டுத் தலங்களைத் திறந்து வருகின்றன.
◼️கொரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் அந்த நோய் பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
◼️பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலானோர் நிரந்ததரமாக வீட்டில் இருந்தே பணியாற்றுவர்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
◼️கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நிலையில் உலக அளவில் பொருளாதாரம் சரிவடைந்து உள்ளது. இதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.அந்த வகையில் ரெனால்ட் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் இருந்து 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️மத்திய அரசு ஊரடங்கில தளர்வு செய்யப்பட்டு, விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், மராட்டிய மாநிலம் பல்ஹார் மாவட்டத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
◼️கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஸ்பெயினில் தடைப்பட்டிருந்த லாலிகா கிளப் கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது. இதற்கு அனுமதி அளித்து அந்த நாட்டு பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment